பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை நேரலையாக எதில், எப்போது பார்க்கலாம்? – விவரங்கள் இதோ!
Bigg Boss Tamil 10 Live Streaming: தமிழில் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 06ம் தேதியில் தொடங்குகிறது. அந்த விதத்தில் இந்த நிகழ்ச்சியின் மீது பெரும் ஆர்வம் இருந்துவருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நேரலையாக எந்த ஓடிடியில் எப்போது பார்க்கலாம் என்பது குறித்து விவரமாக காணலாம்.
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்றுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சி ஆண்டுதோறும் வெளியாகிவருகிறது. இந்தியாவில் ஆரம்பத்தில் இந்தி மொழியில் இந்த நிகழ்ச்சியானது தொடங்கிய நிலையில், இதுவரை 19 சீசன்கள் முடிந்தது. அந்த விதத்தில், தமிழில் கடந்த 2017ம் ஆண்டு இறுதியில் பிக் பாஸ் தமிழ் (Bigg Boss tamil) தொடங்கியிருந்தது. இதுவரை மொத்தமாக கிட்டத்தட்ட 9 சீசன்கள் நிறைவடைந்துள்ளது. முதல் சீசன் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், அதன் பிறகு அடுத்தடுத்து வரும் பிக் பாஸ் சீசன்களும் ஓரளவு வரவேற்பை பெற்றிருந்தது. இறுதியாக வெளியான பிக் பாஸ் சீசன் 9 வெளியாகி பல விமர்சனங்களை வாங்கியது.
அதன் பின் வைல்ட் கார்ட் என்ரியா போட்டியாளர்கள் நுழைந்த நிலையில், பின் ஓரளவு வரவேற்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது, நாளை (06/09/2026) தொடங்குகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை எந்த ஓடிடியில் நேரலையாக எப்போது பார்க்கலாம் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: சூர்யாவின் 47வது திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! – வைரலாகும் பதிவு!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் ஓடிடி மற்றும் நேரலை விவரங்கள்:
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுக்கும் நிலையில், மொத்தம் 21 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்களாம். இந்த நிகழ்ச்சியானது விஜய் டிவியில் தினமும் இரவு 9 மணியளவில் ஒளிபரப்பாகிறதாம். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் மாலை 07 மணி முதல் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: என்னப்பா இது வீடா இல்ல அரண்மனையா ?.. இணையத்தில் வைரலாகும் பிக் பாஸ் சீசன் 10 ஹவுஸ் புகைப்படங்கள்!
மேலும் இந்த நிகழ்ச்சியானது ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் 24/7 மணி நேரமும் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறதாம். மேலும் தினமும் ஒளிபரப்பப்படும் 1 மணிநேர எபிசோடுகளும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் நேரலையாக தினமும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் புரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
1 Day To Go | Bigg Boss Tamil Season 10 😎🔥
Bigg Boss Tamil Season 10 🔥 GRAND LAUNCH – செப்டம்பர் 6 மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில..#Ottikichi #VijaySethupathi #BiggBossTamilSeason10 #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamil #BB10… pic.twitter.com/5sQm7b4zYo
— Vijay Television (@vijaytelevision) September 5, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியானது செப்டம்பர் 06ம் தேதி முதல் விஜய் டிவியில் தினமும் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின்மீது பெரும் எதிர்பார்ப்புகளும் இருக்கிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் எந்த போட்டியாளர்கள் கலந்துகொள்கிறார்கள் என்பது குறித்த தகவல்களும் இணையத்தில் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.