AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மனைவியை பிரியும் பிக்பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி – வைரலாகும் பதிவு

Bigg Boss Tamil Pradeep Antony | பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்த பிரதீப் ஆண்டனி சமீபத்தில் தனது மனைவியை பிரிவதாக வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த செய்தி ரசிகர்களிடையே வருத்ததை ஏற்படுத்தி உள்ளது.

மனைவியை பிரியும் பிக்பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி – வைரலாகும் பதிவு
பிரதீப் ஆண்டனிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Sep 2026 16:03 PM IST

தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் இருக்கும் நடிகர்கள் நடிகைகளுக்கு இருக்கும் பிரபலத்தைப் போல சின்னத்திரையில் உள்ள பிரபலங்களும் ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் சினிமாவில் நடிப்பதற்கு முன்பே ரசிகர்களிடையே பிரபலமானவர் பிரதீப் ஆண்டனி. இவர் கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகர் கவினின் நண்பராக வந்து தமிழக மக்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரையில் படங்களில் நடித்த பிரதீப் ஆண்டனி கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இந்தப் போட்டியின் தொகுப்பாளராக கமல் ஹாசன் இருந்தார். இந்த நிகழ்ச்சி தொடங்கி இரண்டு வாரங்களிலேயே பிரதீப் ஆண்டனியால் தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி மற்ற போட்டியாளர்கள் கூறியதால் ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டார்.

ஆனால் இந்தப் போட்டியை டிவியில் பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்கள் பிரதீப் ஆண்டனி மீது எந்த தவறும் இல்லை என்று அவரை கொண்டாடி வந்தனர். இதன் காரணமாக அந்த சீசனில் கமல் ஹாசன் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். போட்டியாளர்களை பார்வையாளர்கள் கடுமையாக விமர்சித்தனர். இப்படி இருக்க அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு நடிகர் பிரதீப் ஆண்டனி தனது காதலி பூஜா சக்தியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இப்படி இருக்கும் சூழலில் தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தை உடன் மகிழ்ச்சியாக சமூக வலைதளத்தில் பதிவுகளை வெளியிட்டு வந்த பிரதீப் ஆண்டனி சமீபத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மனைவியை பிரியும் பிக்பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி:

அந்த வகையில் நேற்று பிரதீப் ஆண்டனி தனது எக்ஸ் தள பக்கத்தில் மனைவி பூஜா சக்தியை திருமணம் செய்துகொண்டதே தவறான முடிவு என்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவருக்கும் அவரது மனைவி பூஜா சக்திக்கும் இடையே சரியான புரிதல் இல்லை என்றும் இந்த திருமண வாழ்க்கை சரியாக செல்லவில்லை என்றும் தெரிவித்து பதிவை வெளியிட்டு சிறிது நேரத்திலேயே அந்த பதிவை நீக்கிவிட்டார்.

அதனைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள பதிவில் யாருக்காவது கவலை இருந்தால் சொல்கிறேன், நான் நலமாக இருக்கிறேன். சமூக ஊடகங்களில் தனிப்பட்ட விஷயத்தைப் பகிர்ந்தது என் தவறுதான். ஆனால், அது அந்தத் தருணத்தில் என் மனதின் வெளிப்பாடாகவே இருந்தது. அதற்காக நான் வெட்கப்படவில்லை. மக்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தாலும் பரவாயில்லை. என் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தெளிவு எனக்கு இருக்கிறது. தாராளமாக என்னை எடைபோடலாம். நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இது புதுசா இருக்கே… ஐ அம் கேம் படத்திற்கு புரமோஷ்னல் பாடலை வெளியிட்ட படக்குழு

நடிகர் விஜய் ஆண்டனி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Ravi Mohan: ஹன்சிகா எப்போவுமே அப்படித்தான் – ரவி மோகன் சொன்ன நகைச்சுவை சம்பவம்!

Follow Us