AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நீ உள்ள… நா வெளிய… 15 ஆண்டுகளைக் கடந்தது அஜித் குமாரின் மங்காத்தா படம்

15 Years Of Mankatha Movie| தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் 50-வதாக உருவாகி திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் மங்காத்தா. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி 15 ஆண்டுகளைக் கடந்தது.

நீ உள்ள… நா வெளிய… 15 ஆண்டுகளைக் கடந்தது அஜித் குமாரின் மங்காத்தா படம்
மங்காத்தாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Aug 2026 16:52 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவர் அமராவதி படத்தில் நாயகனாக நடிக்கத் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான படங்களில் அவரது ரசிகர்கள் அதிக அளவில் தற்போதும் கொண்டாடும் படங்களில் ஒன்று மங்காத்தா. இந்தப் படம் தான் நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் வெளியான 50-வது படம். இதனை இயக்குநர் வெங்கட் பிரபு எழுதி இயக்கி இருந்தார். மேலும் இந்தப் படம் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் உடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுன், த்ரிஷா கிருஷ்ணா, வைபவ், பிரேம்ஜி அமரன், மகத், ஆண்ட்ரியா, அஞ்சலி, ஜெயபிரகாஷ் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் படத்தின் இயக்குநர் மற்றும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

15 ஆண்டுகளைக் கடந்தது அஜித் குமாரின் மங்காத்தா படம்:

இந்த மங்காத்தா படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாட மிகப்பெரிய காரணம் இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் ஒரு க்ரே ஷேடில் நடித்து இருந்தது படம் பார்த்த பிறகுதான் தெரியவந்தது. அந்த காட்சி வரும் போது திரையரங்கே அதிரும் அளவிற்கு அவரது ரசிகர்கள் ஆரவாரம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்தப் படம் இன்று 15 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கும் வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… ஜேசன் சஞ்சய் இயக்குநராக இல்லாமல் நடிப்பை தேர்வு செய்திருந்தால்… நடிகர் சந்தீப் கிஷன் ஓபன் டாக்

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Poorna: அதில் நடனமாடும்போது நான் கர்ப்பமாக இருப்பதே தெரியாது – பூர்ணா!

Follow Us