AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திலிருந்து வெளியானது தி வெட்டிங் பாடல்!

The Wedding Tamil Full Video Song | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தில் இருந்து வெட்டிங் பாடல் வீடியோ வெளியாகி உள்ளது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திலிருந்து வெளியானது தி வெட்டிங் பாடல்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Aug 2026 17:29 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு இரண்டாவதாக வெளியான படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். முதலாவதாக வெளியான கருப்பு படம் சூர்யாவிற்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த நிலையில் இரண்டாவதாக வெளியான இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தினை எழுதி இயக்கி உள்ள நிலையில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். வாத்தி படத்தின் மூலம் முதன்முறையாக இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றும் ஜிவி பிரகாஷ் குமார் அடுத்ததாக லக்கி பாஸ்கர் படத்திலும் கூட்டணி அமைத்தனர். இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் மூலாம் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.

இவர்களின் கூட்டணியில் முன்னதாக வெளியான இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது போல இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாவதற்கு முன்னதாகவே பாடல்களும் ரசிகர்களிடையே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்திலிருந்து வெளியானது தி வெட்டிங் பாடல்:

இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இதுவரை ரூபாய் 240 கோடிகள் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது படத்தில் இருந்து தொடர்ந்து வீடியோ பாடல்களைப் படக்குழு வெளியிட்டு வருகின்றது. அதன்படி இந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் இருந்து வெட்டிங் வீடியோ பாடல் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.

Also Read… மகேஷ் பாபுவிற்கு சுதா கொங்கராவின் கதை பிடித்தும் நடிக்க முடியல – ஜிவி பிரகாஷ் குமார்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Sardar 2: கார்த்தியின் சர்தார் 2 பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? – வீடியோவுடன் வெளியான அறிவிப்பு!

Follow Us