AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது இதயம் முரளி படம்… மகிழ்ச்சியில் படக்குழு

50 Days Of Idhayam Murali Movie | நடிகர் அதர்வா நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் இதயம் முரளி. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் கடந்துள்ள நிலையில் படக்குழு அதனை கொண்டாடி வருகின்றது.

திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது இதயம் முரளி படம்… மகிழ்ச்சியில் படக்குழு
இதயம் முரளிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Aug 2026 18:46 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் முன்னணி நடிகராக வலம் வருகிறார் நடிகர் அதர்வா முரளி. வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பின் காரணமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறார். நடிகர் அதர்வா முரளி நடிப்பில் தமிழ் சினிமாவில் கடந்த 2025-ம் ஆண்டில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தொடர்ந்து வெற்றியை பதிவு செய்து வந்தது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டும் நடிகர் அதர்வா முரளி நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியான படம் இதயம் முரளி. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.

இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வரும் இவர் இந்த இதயம் முரளி படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறிமுகம் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் அதர்வா முரளி உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது இதயம் முரளி படம்:

90களில் பிறந்து பள்ளியில் படிக்கும் போது இணைந்த நண்பர்கள் கூட்டம் ஒன்றாக இறுதி வரை பயணிக்கிறார்கள். அந்த பயணத்தில் பல உறவுகள் இணைந்தது பல உறவுகள் பிரிந்தது என பல உணர்வுகளை மையமாக வைத்து இந்தப் படம் வெளியாகி இருந்தது. இந்தப் படம் யாருக்கு பெரிய அளவில் கனெக்ட் ஆனதோ இல்லையோ 90ஸ் கிட்ஸ்களுக்கு அதிக அளவில் நாஸ்டாலஜியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இதயம் முரளி படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 50 நாட்களைக் கடந்துள்ளதைப் படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றனர். அந்த போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அந்த விசயங்கள் சாதாரணமானது இல்லை… சொந்த வாழ்க்கை குறித்து பேசிய நடிகை நயன்தாரா

இதயம் முரளி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… சூர்யாவின் 49-வது படத்தை இயக்கும் துல்கர் சல்மான் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்

Follow Us