லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ஓடிடி அப்டேட் வெளியானது – வைரலாகும் தகவல்
DC Movie OTT Update | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் டிசி. இந்தப் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியதில் இருந்து தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் வெளியான படங்களும் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் தொடர்ந்து படங்களை பிசியாக இயக்கி வந்த நிலையில் நடிகராக அறிமுகம் ஆனது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி லோகேஷ் கனகராஜ் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் வெளியான படம் டிசி. இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார்.
கடந்த 07-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து இருந்த நிலையில் படத்திற்கு மிகுந்த பலமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.




லோகேஷ் கனகராஜின் டிசி படத்தின் ஓடிடி அப்டேட் வெளியானது:
தொடர்ந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த டிசி படம் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இந்த டிசி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில் டிசி படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வருகின்ற செப்டம்பர் மாதம் 04-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… பிக் பாஸ் 10-ல் நுழையும் சீரியல் நடிகர்கள்.. க்ளூ கொடுத்த பிக் பாஸ் குழு!
டிசி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
The Mega Blockbuster of the year, #DC is all set to stream only on #SunNXT from September 4th in Tamil, Telugu & Malayalam
Experience the madness in Dolby Vision and Dolby Atmos! @Dir_Lokesh @ArunMatheswaran @anirudhofficial #WamiqaGabbi @isanjkayy @mukesh_DOP… pic.twitter.com/huxpEViqbr
— SUN NXT (@sunnxt) August 29, 2026
Also Read… Jason Sanjay: அப்போதே நான் இயக்குநர் ஆகவேண்டும் என முடிவெடுத்துவிட்டேன் – ஜேசன் சஞ்சய்!