AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தியேட்டரின் வெற்றிநடை போடும் விஸ்வநாத் & சன்ஸ் படம்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்

Vishwanath And Sons | தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் இரண்டாவதாக திரையரங்களில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தின் வெற்றியைப் படக்குழு தற்போது கொண்டாடி வருகின்றது.

தியேட்டரின் வெற்றிநடை போடும் விஸ்வநாத் & சன்ஸ் படம்… படக்குழு வெளியிட்ட போஸ்டர்
விஸ்வநாத் & சன்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Aug 2026 19:17 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் நடிகர் சூர்யாவின் நடிப்பில் கருப்பு படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவதாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்த 14-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்தப் படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி எழுதி இயக்கி உள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதில் இருந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மேலும் இந்தப் படம் கடந்த வாரம் வரை ரூபாய் 200 கோடிகளை வசூலித்து உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜூ, ராதிகா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். படம்திரையரங்குகளில் வெளியாகி இதுவரை இரண்டு வாரங்களைக் கடந்து தற்போது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது.

தியேட்டரின் வெற்றிநடை போடும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம்:

தொடர்ந்து படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்தப் படத்தில் நடிகர் சூர்யா மற்றும் நடிகை மமிதாவின் நடிப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் பாராட்டைப் பெற்று வருகின்றது. இந்த 2026-ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கைக்கு மிகவும் வளர்ச்சி கொடுத்த ஆண்டாக இருக்கும் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு தற்போது படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகின்றது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மண்டாட்டி பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்… கலகலப்பாக பேசிய சூரி

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… அந்த அடையாளத்த தக்கவச்சுக்க… வெளியானது நாகர்ஜுனாவின் கிங் 100 படத்தின் கிளிம்ஸ் வீடியோ

Follow Us