AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மண்டாட்டி பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்… கலகலப்பாக பேசிய சூரி

Soori Talks About Mandaadi Movie | நடிகர் சூரியின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மண்டாட்டி. இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை நடிகர் சூரி படத்தின் விழாவில் பேசியது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மண்டாட்டி பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்… கலகலப்பாக பேசிய சூரி
சூரிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Aug 2026 11:12 AM IST

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர்கள் தொடர்ந்து நாயகன்களாக நடிக்கத் தொடங்கிய நிலையில் அவர்கள் அடுத்தடுத்தப் படங்களிலும் தொடர்ந்து நாயகனாகவே நடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக கலக்கி வந்தவர் நடிகர் சூரி. இவர் கடந்த 2024-ம் ஆண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடியனாக நடித்த நடிகர் சூரி நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு காமெடி கதாப்பாத்திரத்தை ஏற்று நடிப்பதை தவிர்த்துவிட்டு தற்போது தொடர்ந்து நாயகனாக மட்டுமே நடித்து வருகிறார். அதன்படி இவர் நாயகனாக நடித்து இதுவரை திரையரங்குகளில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சூரி தற்போது மண்டாட்டி என்ற படத்தில் நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடெக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. அதில் நடிகர் சூரி கலகலப்பாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மண்டாட்டி பட ஷூட்டிங்கில் நடந்த சம்பவம்:

இந்தப் படத்தின் கதையை சொல்லும் போது இயக்குநரும் தயாரிப்பாளரும் 80 சதவீதம் தொட்டியில் வைத்துதான் படப்பிடிப்பை எடுப்போம் 20 சதவீதம் எது தேவையோ அதுதான் கடல்ல எடுப்போம்னு சொன்னாங்க. ஆனா ஷூட்டிங்க் ஸ்ட்பாட்ல அது அப்படியே மாற்றி நடந்தது. வெற்றிமாறன் சார் சொல்லிட்டாரு, ‘அப்படி பட்ட டைட்டானிக் படமே தொட்டில்-ல தான் எடுத்திருக்காங்க’னு. அது மாதிரி இன்னும் 5 படங்கலை சொன்னாரு.

அப்புறம் நானும் வெற்றி அண்ணா கிட்ட கேட்டேன். அப்போ அவர், ‘சூரி, உலகத்துல மிகபெரிய படமான டைட்டானிக் படமே இந்த மாதிரி தான் எடுத்திருக்காங்க. இன்னொரு விஷயம், பிரம்மாண்டம் என்பதெல்லாம் க்ளோஸ்-ல தான் இருக்கு’னு சொன்னாரு. ஷூட் ஸ்டார்ட் பண்ணிட்டோம். ஒரு ஆறு மாசம் ஊருக்கு போவேன்-னு நினைச்சேன். ஆனா 1 மாசம் ஆச்சு, 2 மாசம் ஆச்சு, வீட்ல அப்போ அப்போ போன் பண்ணும் போது, ​​மொதத்தையும் கடல்ல தான் எடுத்துட்டு இருக்காங்கனு சொன்னேன் என்றும் அவர் கலகலப்பாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… நோ அக்டோபர்… இந்த வருசம் செப்டம்பரே… பிக்பாஸ் தமிழ் சீசன் 10 குறித்து வெளியானது அதிகாரப்பூர்வ அப்டேட்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… நெல்சன் சொன்னது போலவே, அவர் ஒரு அற்புதமான மனிதர் – ரஜினிகாந்த் குறித்து புகழ்ந்து பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து

Follow Us