AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கீர்த்தி சுரேஷின் டோரதி பட 2வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த இயக்குநர்!

Dorothy Movie Second Single: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 10வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் டோரதி. இப்படத்திற்கு இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் நிலையில், சமீபத்தில் கல்யாண விருந்து என்ற முதல் பாடல் வெளியானது, தற்போது 2வது பாடலின் ரிலீஸ் குறித்து கார்த்திக் சுப்புராஜ் அப்டேட் கொடுத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷின் டோரதி பட 2வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? அப்டேட் கொடுத்த இயக்குநர்!
டோரோதி திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Aug 2026 15:34 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்திக் சுப்புராஜ் (Karthik Subburaj). இவரின் இயக்கத்தில் சினிமாவில் இதுவரை மொத்தம் 9 திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் ரெட்ரோ (Retro). இதை கார்த்திக் சுப்புராஜ் இயக்க, நடிகர் சூர்யா (Suriya) லீட் நாயகனாக நடித்திருந்தார். மேலும் பூஜா ஹெக்டே (Pooja Hegde) உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் இணைந்து நடித்திருந்தனர். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை கொடுத்தது. இந்த படத்திற்கு பின் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் 10வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் டோரதி (Dorothy). இதில் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) நாயகியாக நடிக்க, ரிஷிகாந்த் (Rishikanth) மற்றும் சனந்த் (Sananth) இருவரும் லீட் வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja) இசையமைத்துள்ள நிலையில், சமீபத்தில் இப்படத்தின் முதல் சிங்கிளான “கல்யாண விருந்து” வெளியானது. இது தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் நிலையில், தற்போது 2வது பாடல் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நுழையும் கிரிக்கெட் வீரர்.. அட இவரா?

டோரதி திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்து கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

கார்த்தி சுப்புராஜின் இந்த டோரதி படமானது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் 2 கதாபாத்திரங்களை மையமாக கொண்டு இயக்கப்பட்டிருக்கும் நிலையில், இது ஒரு சிறு பட்ஜெட் படமாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ரம்யா கிருஷ்ணனுக்கு பதிலாக நானே.. அலா பொலேலோ பாடலில் ரஜினியுடன் பணியாற்றியது தருணம் – பூர்ணா பகிர்ந்த விஷயம்!

இந்த படத்திற்கு இசைஞானி இசையமைத்துள்ள நிலையில், 80ஸ் வைப்பில் இப்படத்தின் பாடல்கள் அமைந்துள்ளது. இந்நிலையில், டோரதி படத்தின் 2வது பாடலாக முத்து மணி பாடல் அமைந்துள்ளது. இந்த பாடலானது 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதியில் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டோரதி திரைப்படத்தின் ரிலீஸ்:

இந்த டோரதி படமானது திரில்லர், காமெடி மற்றும் விறுவிறுப்பான கதையில் உருவாகியுள்ளது. இப்படத்தின் நடிகை கீர்த்தி சுரேஷ்தான் டோரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படமானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் மற்ற பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us