ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
Jolliya Iruntha Oruthan Movie First Single Update | தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடிப்பில் அடுத்ததாக உருவாகிவ் அரும் படம் ஜாலியா இருந்த ஒருத்தன். இந்தப் படத்தில் இருந்து முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என்று அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு குறிப்பிட்ட சில இயக்குநர்கள் குறிப்பிட்ட சில நடிகர்களுடன் இணைந்து பணியாற்றுவது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெறும். அந்த கூட்டணி இணைகிறது என்றால் நிச்சயம் அந்தப் படம் செம்ம ஃபன்னாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்பும் ஒரு சில இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் உள்ளனர். அப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் ஒரு கூட்டணி தான் இயக்குநர் ராஜேஷ் மற்றும் நடிகர் ஜீவா கூட்டணி. இவர்களின் கூட்டணியில் தமிழ் சினிமாவில் வெளியகும் படங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்ப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அப்படி அவர்களின் கூட்டணியில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற படம் தான் சிவா மனசுல சக்தி மற்றும் சில படங்களில் கேமியோ செய்துள்ளார் ஜீவா.
இந்தப் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இவர்களின் கூட்டணி பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்தது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.




ஜாலியா இருந்த ஒருத்தன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?
அந்த வகையில் இந்த ஜாலியா இருந்த ஒருத்தன் என்ற படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ் எப்போது என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்தப் படத்தில் முதல் சிங்கிள் நாளை 28-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாகும் என்று இயக்குநர் ராஜேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜாலியா இருந்த ஒருத்தன் படக்குழு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Get ready to switch ON the #SMS vibe again! 🎸🔥
The OG combo is BACK! 😎🔥
The FIRST SINGLE from #JolliyaIrundhaOruthan #JIO drops this Friday at 6 PM! 🎶💥 Stay Tuned !!!
Produced by @malikstreams #datoabdulmalik
Co Produced by @Razikahamed16Starring @jiivaofficial
— Malik Streams Corporation (@malikstreams) August 26, 2026
Also Read… நண்பன் ஜிவி பிரகாஷின் இம்மார்டல் பட ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் தனுஷ்!