AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நண்பன் ஜிவி பிரகாஷின் இம்மார்டல் பட ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் தனுஷ்!

Immortal Movie Trailer Out Now | தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் நாயகனாகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள இம்மார்டல் படத்தின் ட்ரெய்லரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நண்பன் ஜிவி பிரகாஷின் இம்மார்டல் பட ட்ரெய்லரை வெளியிட்ட நடிகர் தனுஷ்!
இம்மார்டல்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Aug 2026 18:38 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய மொழிகளில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து இசையமைப்பாளராக பல ஹிட் படங்களில் இசையமைத்த ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக நடிகராகவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். இசையமைப்பாளராக வருடத்திற்கு பலப் படங்களில் பணியாற்றி வந்தாலும் நடிகராக ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படமாவது திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டி நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் தற்போது இரண்டாவதாக இம்மார்டல் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முன்னதாக ஹேப்பி ராஜ் படம் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இம்மார்டல். இந்தப் படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் டிஎம் கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்ய கதிர், அர்ஷு மஹர்ஜன், பெமா த்சம்சோ, சுனிதா ஸ்ரேஸ்தா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர்.

நண்பன் ஜிவி பிரகாஷின் இம்மார்டல் பட ட்ரெய்லரை வெளியிட்ட தனுஷ்:

முன்னதாக இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் திரையரங்குகளில் வெளியான காரணத்தால் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தப் படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 04-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரை தற்போது ஜிவி பிரகாஷின் நண்பர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Mandaadi: படகு போட்டி கதையில்.. சூரியின் மண்டாடி திரைப்படத்தின் அதிரடி டீசர் வெளியீடு!

நடிகர் தனுஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… டாக்ஸிக் வெளியீடு.. உலகளவில் 12,000 தியேட்டர்களில் ரிலீஸ்.. மாஸ் ஓப்பனிங்!

Follow Us