வசூலில் 80 கோடியைக் கடந்தது இறுமுடி படம்… வைரலாகும் ஜிவி பிரகாஷ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு
Irumudi Movie Box Office Update | இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் தொடர்ந்து நாயகனாகவும் இசையமைப்பாளராகவும் பிசியாக வலம் வரும் நிலையில் தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டில் அவரது இசையில் வெளியாகும் படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் அதிக அளவில் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களில் இசையமைத்து வருவது போல தெலுங்கு மொழியிலும் அதிக அளவில் படங்களில் இசையமைத்து வருகிறார் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார். இவர் சினிமாவில் இசையமைப்பாளராக மட்டும் இன்றி நடிகராகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இதில் அதிக அளவில் நாயகனாக நடிக்கும் படங்களை விட இசையமைப்பாளராக பணியாற்றும் படங்களே அதிக அளவில் படங்களில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த 2026-ம் ஆண்டில் மட்டும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் அடுத்தடுத்து பலப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அதன்படி இதுவரை மொத்தம் 9 படங்கள் வெளியாகி உள்ளது. அதில் 7 படங்கள் தமிழ் மொழியிலும் இரண்டு படங்கள் தெலுங்கு மொழியிலும் வெளியாகி உள்ளது. இவரது இசையில் இந்த 2026-ம் ஆண்டில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியான படங்களில் 7 படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் வெளியான இறுமுடி படம் தற்போது மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
வசூலில் 80 கோடியைக் கடந்தது இறுமுடி படம்:
அதன்படி நடிகர் ரவி தேஜா நாயகனாக நடித்து நடிகை பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து உள்ள படம் இறுமுடி. இந்தப் படம் கடந்த 21-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியாகி 3 நாட்களில் இந்த படம் ரூபாய் 80 கோடியை கடந்து வெற்றிநடைப்போட்டு வருகின்றது. இது குறித்து படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் நெகிழ்ச்சியாக வெளியிட்ட எக்ஸ் தள பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… பிளாக்பஸ்டர் ஹிட்.. 10 நாட்களில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட வசூல் எவ்வளவு தெரியுமா?
ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Rampage collections … #irumudi creating waves in the industry 💥💥💥 BLOCKBUSTER CINEMA
….. thanks for the amazing response for music . Repeat for songs in theatres and BGScore appreciation especially the climax pic.twitter.com/Dd8PPQ4opn
— G.V.Prakash Kumar (@gvprakash) August 24, 2026
Also Read… உள்ள ஒளிச்ச உயிரே இப்ப பிரியாதிரு நீ… வைரலாகும் தளபதி விஜயின் ஃபேரவல் வீடியோ!



