AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிளாக்பஸ்டர் ஹிட்.. 10 நாட்களில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட வசூல் எவ்வளவு தெரியுமா?

Suriya's Vishwanath And Sons: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவர்தான் தி ஒன் சூர்யா. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் இவர் நடித்த திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் வெளியாகி 10 நாட்களான நிலையில், மொத்த வசூல் குறித்து படக்குழு வெளியிட்டுள்ளது.

பிளாக்பஸ்டர் ஹிட்.. 10 நாட்களில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் பட வசூல் எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Aug 2026 18:57 PM IST

தனுஷின் வாத்தி, துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் போன்ற திரைப்படங்களை இயக்கி வெற்றிக் கண்டவர் இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri). தெலுங்கு இயக்குநரான இயக்கத்தில் நேரடியக தமிழில் உருவாகி வெளியான திரைப்படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் (Vishwanath And Sons). இந்த படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்க, தி ஒன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் சூர்யா (Suriya) லீட் நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் சூர்யா “சஞ்சய் விஸ்வநாத்”என்ற கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ (Mamitha Baiju) மேடி (Maddy) என்ற வேடத்தில் நடித்திருந்தார். நேரடி தமிழ் படமாக உருவான இது, தெலுங்கிலும் வெளியாகியிருந்தது.

கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதியில் வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம், இன்றுடன் (23/08/2026) 10 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் இப்படம் உலகமெங்கும் மொத்தம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: படத்தில மட்டும் இல்ல நிஜ வாழ்க்கையிலும் யாஷ் அப்படிதான் – நடிகை நயன்தாரா சொன்ன விசயம்

சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் 10வது நாள் வசூல்:

நடிகர் சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் நடிப்பில் சூப்பர்ஹிட் படமாக அமைந்ததுதான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இந்த படமானது பேமிலி ஆடியன்ஸை ஈர்த்துவரும் நிலையில், எமோஷனல் பீல் குட் படமாக அமைந்திருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் சிறப்பாக அமைந்திருந்தது. இப்படம் வெளியாகி 10 நாட்களை கடந்த நிலையில், உலகமெங்கும் இதுவரை சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்ததாம்.

இதையும் படிங்க:  வெட்டு.. குத்து.. ரத்தம் இல்லாத படம்.. ஒன்ஸ் மோர் படம் குறித்து பேசிய அர்ஜுன்தாஸ்!

சூர்யா மற்றும் மமிதா பைஜூவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் வசூல் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது :

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த படமானது சிறப்பான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் நிலையில், படத்தின் மீது அதிக ஆர்வம் இருக்கிறது. திரையரங்குகளில் வெளியான இப்படம் ஓடிடியில், 2026ம் ஆண்டு செப்டம்பர் மாத 2வது வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை விஜய் டிவி பெற்றுள்ள நிலையில், 2026ம் ஆண்டு தீபாவளிக்கு தொலைக்காட்சிகளிலும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Follow Us