Seyon: பாடல் ரெடி.. சிவகார்த்திகேயனின் சேயோன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து அப்டேட்டை வெளியிட்ட சந்தோஷ் நாராயணன்!
Seyon Movie First Single : சிவகார்த்திகேயனின் நடிப்பில் பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாக்கப்பட்டுவருவதுதான் சேயோன். சிவகுமார் முருகேசன் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவருகிறார். இந்நிலையில் சேயோன் பட ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து சந்தோஷ் நாராயணன் அப்டேட் கொடுத்துள்ளார். அது பற்றி பார்க்கலாம்.
தென்னிந்திய சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் நடிப்பில் இதுவரை மொத்தம் 25 படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவரின் நடிப்பில் 26வது திரைப்படமாக உருவாகிவருவதுதான் சேயோன் (Seyon). இதை கமல்ஹாசன் (Kamal Haasan) ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்க, இயக்குநர் சிவகுமார் முருகேசன் (Sivakumar Murugesan) இயக்கிவருகிறார். இவர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பின் கீழ் தாய் கிழவி (Thaai Kizhavi) என்ற படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர். இதற்க்கு பின் இவர் இணைந்துள்ள 2வது படம்தான் சேயோன். இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் (Bhagyashri Borse) நடித்துவருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் மதுரையில் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், இறுதிக்கட்டத்தில் உள்ளதாம். சேயோன் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவரும் நிலையில், முதல் பாடல் குறித்து சூப்பர் அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: நாடோடிகள் படத்தின் கதையை யாரும் ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை – சமுத்திரக்கனி
சேயோன் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து அப்டேட் கொடுத்த சந்தோஷ் நாராயணன்:
சந்தோஷ் நாராயணன் அந்த பதிவில், “சேயோன் பட ப்ரோமோ பாடலை விரும்பிய, எனது அன்பான செல்லங்களுக்கு நன்றி என்று, இப்படத்தின் பாடல் தயாராகிவருகிறது. மிகவும் சிறப்பான மற்றும் பிரம்மாண்டமான படைப்பு. இதை வெளியிடுவதற்கு பல அடுக்குத் திட்டங்கள் உள்ளன. பொருத்தமான வெளியீட்டுத் தேதியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் உங்களில் நானும் ஒருவன்.
இதையும் படிங்க: டிசி படத்தில் பார்வதியின் கேரக்டரை அப்படி காட்ட விரும்பினேன் – இயக்குநர் அருண் மாதேஸ்வரன்!
என் உள்ளிருக்கும் குழந்தை, இந்தப் பாடலை உங்கள் அனைவருக்கும் காட்ட ஆவலுடன் காத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் இப்படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிடும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
சேயோன் திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து சந்தகோஸ் நாராயணன் வெளியிட்ட அப்டேட் பதிவு:
Thank you my dearest chellams for loving this from Seyon. The song is cooked and ready. This is a very special and a mammoth production and has many layers of plans for the rollout. I am one among you in expecting a suitable release date and the child in me cannot wait to show… https://t.co/jg64xUGjNf
— Santhosh Narayanan (@Music_Santhosh) August 22, 2026
சேயோன் படத்தில் சிவகார்த்திகேயன், பாக்யஸ்ரீ போர்ஸ், பாலா சரவணன், கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி போன்றவர்களும் இணைந்து நடித்துவருகிறார்கள். மிகவும் பிரம்மாண்டமான திரைப்படமாக இது உருவாகிவரும் நிலையில், 2026ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுவருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இல்லையேல் 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகுமாம்.