AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உள்ள ஒளிச்ச உயிரே இப்ப பிரியாதிரு நீ… வைரலாகும் தளபதி விஜயின் ஃபேரவல் வீடியோ!

Thalapathy Vijay Cinema Career Video | நடிகர் தளபதி விஜய் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்த நிலையில் அவரது கடைசிப் படமான ஜன நாயகன் படத்தின் முடிவில் அவரது மொத்த திரை வாழ்க்கையும் அடங்கிய வீடியோ ஒன்று வெளியிட்டது ஜன நாயகன் படக்குழு. அது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

உள்ள ஒளிச்ச உயிரே இப்ப பிரியாதிரு நீ… வைரலாகும் தளபதி விஜயின் ஃபேரவல் வீடியோ!
தளபதி விஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Aug 2026 19:08 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது சினிமாவை விட்டு விலகி முழுவதுமாக அரசியலில் களம் இறங்கி உள்ளார் நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் போட்டியிட்ட முதல் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதிவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நடித்து வந்த நடிகர் தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக நாயகனாக நடித்து திரையரங்குகளில் வெளியாகி உள்ள படம் ஜன நாயகன். இந்தப் படம் தான் அவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் இறுதிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் வெளியாவதற்கு முன்னதாகவே அவரது ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடர்ந்து படக்குழு பல வீடியோக்களை வெளியிட்டது.

மேலும் இந்த ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைப்பெற்றது. அந்த விழாவே தளபதி விஜய்க்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சி போல அமைந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஜன நாயகன் படக்குழு நடிகர் விஜய்க்காக வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளது.

வைரலாகும் தளபதி விஜயின் ஃபேரவல் வீடியோ:

அதன்படி ஜன நாயகன் படம் திரையரங்குகளில் வெளியான போது படத்தின் முடிவிற்கு பிறகு தளபதி விஜய்க்காக உருவாக்கிய வீடியோவும் ஒளிபரப்பானது. அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் திரையரங்குகளிலேயே அழுகும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த வீடியோவை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அது தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… Jason Sanjay: அப்படியென்றால் நிச்சயம் நடிப்பேன்.. ஆனால் – ஜேசன் சஞ்சய் ஓபன் டாக்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் முதல் சென்னை லவ் ஸ்டோரி வரை… தென்னிந்திய மொழிகளில் இந்த வாரம் என்ன படம் ஓடிடியில் பார்க்கலாம்!

Follow Us