AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று மாலை வெளியாகிறது டோரதி படத்தின் முதல் சிங்கிள் கல்யாண விருந்து

Dorothy Movie First Single Release Update | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் 10-வதாக உருவாகி வரும் டோரோதி படத்தின் முதல் சிங்கிள் வீடியோ இன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை வெளியாகிறது டோரதி படத்தின் முதல் சிங்கிள் கல்யாண விருந்து
கல்யாண விருந்துImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Aug 2026 12:35 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இவரது இயக்கத்தில் தொடர்ந்து வெளியான படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இதுவரை மொத்தம் 9 படங்களை தமிழ் சினிமாவில் இயக்கி உள்ள இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பல முன்னணி நடிகர்களுடன் பணியாற்றி உள்ளார். அதன்படி தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நடிகர்களாக உள்ள நடிகர்கள் தனுஷ், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் சூர்யா ஆகியோருடன் இணைந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பணியாற்றி உள்ளார். இவரது இயக்கத்தில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் ரெட்ரோ. நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த இந்தப் படம் கடந்த 2025-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது 10-வது படமான டோரதி படத்தின் பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் நடித்து உள்ளனர்.

இன்று மாலை வெளியாகிறது டோரதி படத்தின் சிங்கிள் கல்யாண விருந்து:

மேலும் இந்தப் படம் வருகின்ற 25-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து உள்ளார். இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிளான கல்யாண விருந்து இன்று மாலை வெளியாகும் என்று தெரிவித்துள்ளனர். இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… மண்டாட்டி படத்திற்கு என்ன சென்சார் கிடைத்துள்ளது? வெளியானது அப்டேட்

டோரதி படக்குழுவினர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு;

Also Read… தனுஷ் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? – ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில்!

Follow Us