AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முதலில் தனுஷ் ஒரு முரட்டுதனமான மனிதர் என்று நினைத்தேன் – நடிகை பிரியா பவானி சங்கர்

Actress Priya Bhavani Shankar abour Dhanush | தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதலில் தனுஷ் ஒரு முரட்டுதனமான மனிதர் என்று நினைத்தேன் – நடிகை பிரியா பவானி சங்கர்
பிரியா பவானி சங்கர்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 19 Aug 2026 16:30 PM IST

தமிழில் செய்தி வாசிப்பாளராக முதலில் தனது பணியைத் தொடங்கியவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் செய்தி வாசிப்பாளராக இருக்கும் போதே தமிழக மக்களிடையே பிரபலமானவராக இருந்தார். அதனைத் தொடர்ந்து சின்னத்திரை சீரியல்களில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி இவரது நடிப்பில் வெளியான சீரியல்கள் அதிக அளவில் கவனத்தை ஈர்த்த நிலையில் தமிழக மக்களின் மனதிலும் இடம் பிடிக்கத் தொடங்கினார். சின்னத்திரையில் வெற்றி நாயகியாக வலம் வந்த நடிகை பிரியா பவானி சங்கர் பிறகு தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்னணி நாயகன்களாக வலம் வருபவர்களுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிக அளவில் படங்களில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தெலுங்கு மொழியிலும் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது நடிகர் ரவி தேஜாவிற்கு ஜோடியாக இருமுடி என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழு தொடர்ந்து புரமோஷன் பணிகளில் பிசியாக உள்ளது. இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகர் தனுஷ் குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

முதலில் தனுஷ் ஒரு முரட்டுதனமான மனிதர் என்று நினைத்தேன்:

பிரியா பவானி சங்கர், தான் தொகுப்பாளராக இருந்த ஆரம்ப நாட்களில் தனுஷை பேட்டி கண்டதை நினைவு கூர்ந்தார். அப்போது, ​​தனுஷ் சோர்வாக இருந்ததோடு, அந்தப் பேட்டியில் ஆர்வமில்லாதவராகவும் காணப்பட்டார். ஆரம்பத்தில் அவர் ஆணவமாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொள்வதாகத் தான் நினைத்ததாக பிரியா ஒப்புக்கொண்டார்.

ஆனால், அவரே திரையுலகில் நுழைந்து, விளம்பரப் பணிகளின் சோர்வையும் திரும்பத் திரும்ப வரும் பேட்டிகளையும் அனுபவித்த பிறகு, நடிகர்கள் சில சமயங்களில் ஏன் அப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பின்னர் அவர் தனுஷைச் சந்தித்து, அவரிடம் வெளிப்படையாகக் கூறினார். உண்மையிலேயே நீங்கள் முரட்டுத்தனமாக நடந்துகொண்டீர்கள் என்று நான் நினைத்தேன் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… தொடர் தோல்விகள்… புது படத்தின் பணியை தொடங்கிய இயக்குநர் சிறுத்தை சிவா

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து படம் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்

Follow Us