தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து படம் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்
Dhanush and Tamizharasan Pachamuthu movie update | தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ளவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் 56-வதாக உருவாக உள்ள படத்தின் படப்பிடிப்பு பணிகள் எப்போது தொடங்கும் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தொடர்ந்து தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவ்வபோது ஹாலிவுட் படங்களிலும் நடிகர் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025-ம் ஆண்டில் நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் படங்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அதன்படி முன்னதாக தனுஷ் நடிப்பில் கர என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களிடிஅயே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தாஅக வெளியாக உள்ள படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ள இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.




தனுஷ் – தமிழரசன் பச்சைமுத்து படம் எப்போது தொடங்கும்?
இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள 56-வது படம் தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் நடிகர் தனுஷின் 56-வது படத்தினை இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்க உள்ளார். இந்தப் படத்தின் ப்ரீ புரடெக்ஷன் பணிகள் தொடங்கி தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் செப்டம்பர் மாத இறுதியில் படத்தின் பூஜை நடைபெறும் என்றும் வருகின்ற அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Can I kiss you..? குட்டி ரசிகர்களுக்கு முத்தமிட்ட அஜித் குமார் – வைரலாகும் வீடியோ பதிவு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#D56 Update 🔥#Dhanush x Tamizharasan Pachamuthu project Pooja in late September, with shooting expected to begin in the first week of October. 😈⚔️🗡️@tamizh018 Ayya, I’m very excited about this project! 🔥💥👊@DawnPicturesOff pic.twitter.com/jOizQtxfps
— CinemaExpress_X (@SivaPerumal211) August 17, 2026
Also Read… அனிருத் – காவியா மாறனின் திருமண தேதி எப்போது தெரியுமா? – வைரலாகும் பதிவு!