AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை… 25 ஆண்டுகளைக் கடந்தது பூவெல்லாம் உன் வாசம் படம்!

25 Years Of Poovellam Un Vasam Movie | நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றப் படம் பூவெல்லாம் உன் வாசம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

காதல் வந்ததும் கன்னியின் உள்ளம் காதலை யாருக்கும் சொல்வதில்லை… 25 ஆண்டுகளைக் கடந்தது பூவெல்லாம் உன் வாசம் படம்!
பூவெல்லாம் உன் வாசம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 17 Aug 2026 15:14 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 2001-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் பூவெல்லாம் உன் வாசம். இந்தப் படத்தை இயக்குநர் எஸ். எழில் எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்து உள்ள நிலையில் அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சிவகுமார், ஜானகி சபேஷ், நாகேஷ், சாயாஜி ஷிண்டே, ஜெய முரளி, வி.எஸ். ராகவன், சுகுமாரி, விவேக், யுகேந்திரன், கோவை சரளா, வையாபுரி, சோனா ஹைடன், மதன் பாப், எஸ்.என்.லட்சுமி, சுவாமிநாதன், இளவரசு, மயில்சாமி, லாவண்யா, பிரபாகரன், மதியழகன், யுக்தா முகி, எழில் மற்றும் ராஜு சுந்தரம் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் வித்யாசாகர் இசையமைத்து இருந்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

25 ஆண்டுகளைக் கடந்தது பூவெல்லாம் உன் வாசம் படம்:

நண்பர்களாக உள்ள பலரின் கனவை இந்தப் படத்தில் நிஜமாக்கி காட்டி இருப்பார்கள். ஒவ்வொரு உற்ற நண்பர்களுக்குள்ளும் அருகருகே வீட்டைக் கட்டி ஒன்றாகவே வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். இப்படி இருக்கும் ஆசையைதான் இந்தப் படத்தின் நிஜமாகவே காட்டி இருப்பார்கள். அதுதான் இந்தப் படம் வெற்றிப் பெற மிகப்பெரிய காரணமாக இருந்தது. மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.

Also Read… நடிகர் சூர்யாவிடன் அந்த மாதிரியான ஒரு கதையை சொன்னேன் – இயக்குநர் எச்.வினோத்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Dharman: ரஜினிகாந்தின் 51வது வருட சினிமா.. கேக் வெட்டி கொண்டாடிய தர்மன் படக்குழு!

Follow Us