Venky Atluri: நானே ஒரு ரசிகன்.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை பார்த்த இயக்குநர் வெங்கி அட்லூரி பேச்சு!
Suriyas Vishwanath & Sons: தி ஒன் சூர்யாவின் நடிப்பில் 46வது திரைப்படமாக வெளியாகியிருப்பதுதான் விஸ்வநாத் & சன்ஸ். இதை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்த நிலையில், இன்று (14/08/2026) உலகமெங்கும் வெளியாகியுள்ளது. இப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்கில் பார்த்த வெங்கி, அதன் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
தென்னிந்திய மக்கள் மத்தியில் இயக்குநராக மிகவும் பிரபலமானவர் வெங்கி அட்லூரி (Venky Atluri). தெலுங்கு சினிமாவில் இயக்குநராக பணியாற்றிய இவரின் இயக்கத்தில் வாத்தி (Vaathi) மற்றும் லக்கி பாஸ்கர் (Lucky Baskhar) போன்ற ஹிட் படங்களில் இருக்கிறது. இந்த வரிசையில் நடிகர் சூர்யாவுடன் (Suriya) இவர் இணைந்து பணியாற்றியிருந்த திரைப்படம்தான் விஸ்வநாத் & சன்ஸ் (Vishwanath And Sons). இதில் சூர்யா “சஞ்சய் விஸ்வநாத்” என்ற பிஸ்னஸ் மேனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். முழுக்க முழுக்க பேமிலி கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் (GV Prakash Kumar) இசையமைத்துள்ளார். இவரின் இசையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரையரங்குகளில் தெறிக்கவிடுகிறது.
இன்று (14/08/2026) விஸ்வநாத் & சன்ஸ் படமானது உலகமெங்கும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் இயக்குநர் வெங்கி அட்லூரி, திரைப்படத்தை பார்வையிட்டுள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு குறித்து பேசியிருக்கிறார்.




இதையும் படிங்க: விஷாலின் மகுடம் திரைப்படம் சொதப்பலா? இல்ல சூப்பரா? – விமர்சனங்கள் இதோ!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை திரையரங்கில் பார்த்த வெங்கி அட்லூரி பேச்சு:
அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வெங்கி அட்லூரி, “எனக்கு ரொம்ப மனநிறைவு மற்றும் திருப்தியாக இருக்கு. இப்படத்தை பார்த்த பலரும் மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். நானும் ஒரு சூர்யா ரசிகன்தான், அதனால் அவர்களுடன் நானும் மகிழ்ச்சியாக படத்தை பார்த்தேன். சூர்யா சாரோட எனது முதல் படம். சூர்யா சாரின் ஒழுக்கம் மற்றும் அவரின் எல்லா விஷயங்களும் எனக்கு ரொம்பவே பிடிக்கும். இந்த படத்தய் ஒரு “ஃபேன் பாய் மொமெண்ட்-டாக பார்க்கிறேன். குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படம், நானும் ஒரு ரசிகனாக கொண்டாடினேன்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சூர்யாவின் பிரசன்னமும்.. மமிதாவின் குறும்பும்.. பேமிலி ஆடியன்ஸை ஈர்க்கும் விஸ்வநாத் & சன்ஸ் எப்படி இருக்கு?
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படம் வெளியானது குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:
The emotions, the laughs and the characters that feel like home… are winning the audience over 💥💥
Here’s a HEARTFELT BLOCKBUSTER #VishwanathAndSons made to be celebrated with your loved ones ❤️🔥#BlockbusterVAS 🫶🏻@Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa… pic.twitter.com/ZKzr3p8Nof
— Sithara Entertainments (@SitharaEnts) August 14, 2026
சூர்யாவின் இந்த விஸ்வநாத் & சன்ஸ் படமானது இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதில் சூர்யா, மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா டாண்டன் போன்ற பல்வேறு நட்சத்திர நடிகராலும் இணைந்து நடித்துள்ளனர். பேமிலி ஆடியன்ஸை இப்படமானது ஈர்க்கும் நிலையில், கருப்பு படத்திற்கு பின் விஸ்வநாத் & சன்ஸ் படமும் வெற்றியாக அமையும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.