யாரும் பார்த்திடாத அஜித் குமார் குழந்தைகளின் போட்டோஸ் – வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டாகிராம் பதிவு
Actress Shalini Ajith Kumar instagram Post Viral On Social Media | தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் நட்சத்திர ஜோடி அஜித் குமார் - ஷாலினி தம்பதி. இவர்கள் தொடர்பான செய்திகள் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் ஒன்றாக இணைந்து நடித்த நடிகர்கள் பலர் காதலித்து திருமணம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் இறுதிவரை ஒன்றாக இருந்தனரா என்றால் அப்படி இருக்கும் ஜோடிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அப்படி தங்களது காதலால் ரசிகர்களிடையே கொண்டாடப்படுபவர்கள் நடிகர்கள் அஜித் குமார் மற்றும் ஷாலினி தம்பதி. நடிகை ஷாலினி குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகம் ஆகி நாயகியாக பல ஹிட் படங்களில் நடித்து உள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து பல நூறு படங்களில் நடித்து உள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த போதே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நடிகை ஷாலினி பிறகு நாயகியாக சிலப் படங்களில் நடித்தார்.
இப்படி இருக்கும் சூழலில் நடிகர் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் அமர்களம் என்ற படத்தில் இணைந்து நடித்தனர். அவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படத்திலேயே இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அந்த காதல் இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் மற்றும் ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.




யாரும் பார்த்திடாத அஜித் குமார் குழந்தைகளின் போட்டோஸ்:
ரசிகர்கள் கொண்டாடும் நட்சத்திர ஜோடியாக உள்ள நடிகர்கள் அஜித் குமார் – ஷாலினி தம்பதி தொடர்பான செய்திகள் தொடர்ந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகை ஷாலினி கடந்த சில ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தந்தையர் தினத்தை கொண்டாடி வரும் நிலையில் நடிகை ஷாலினி தனது குழந்தைகள் அஜித் குமார் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… கார்த்தி உடன் கூட்டு சேரும் நடிகர் கவின் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்
நடிகை ஷாலினி அஜித் குமார் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram