விஜய் டிவியின் புத்தம் புது சீரியல் ஒண்ணா இருக்க கத்துக்கணும்.. சீரியல் எப்போது ஆரம்பம் தெரியுமா? – புரோமோ வீடியோ!
Onna Irukka Kaththukanum Serial: விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி காத்திருக்கும் சீரியல்தான் ஒண்ணா இருக்க கத்துக்கணும். இந்த சீரியலின் புரோமோ தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. இந்நிலையில் தற்போது இந்த சேரியியலின் ஒளிபரப்பு தேதி குறித்து புது புரோமோ வெளியாகியுள்ளார்.
தமிழில் சீரியலுக்கு பிரபலமான தொலைக்காட்சியாக இருந்துவருபவது விஜய் டிவி (Vijay Tv). இந்த தொலைக்காட்சியில் ரியாலிட்டி நிகழ்ச்சி மற்றும் சீரியல்கள் தொடர்ந்து வெளியாகிவருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் மகாநதி (Mahanadhi) சீரியலும் நிறைவடைந்துவிட்டது. அந்த வகையில் தொடர்ந்து புது புது சீரியல்கள் ஒளிபரப்பாகவுள்ளதாக புரோமோ வெளியாகிவந்தது. அதில் ஸ்டாலின் (Stalin), சியாமந்தா மற்றும் நிரோஷா இணைந்து நடித்துவரும் புது சீரியல்தான் ஒண்ணா இருக்க கத்துக்கணும் (Onna Irukka Kaththukanum). இந்த சீரியலில் வைஷு கதாநாயகியாக நடித்துவருகிறார். இந்த சீரியலானது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் போலவே குடும்ப கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரியல், ஹோட்டலை நடத்தும் ஒரே குடும்பம், அந்த குடும்பத்திற்குள் நுழையும் புதிய மருமகளை பற்றிய குடும்ப கதையை கொண்ட சீரியலாக தயாராகியுள்ளது. இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துவரும் இதன் ஒளிபரப்பு தேதி குறித்து புதிய புரோமோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: சமூக வலைதளத்தில் 30 மில்லியன் பார்வைகளைக் கடந்தது ஓம் படத்தின் டைட்டில் வீடியோ
ஒண்ணா இருக்க கத்துக்கணும் சீரியல் எப்போது ஆரம்பம்:
இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்டாலின், நிரோஷா, வைஷு, சுஜாதா தனுஷ், கார்த்திக் மற்றும் பல்வேறு பிரபலன்கள் இணைந்து நடித்துள்ளனர். இது குடும்ப கதைக்களத்தில் உருவாகியிருக்கும் நிலையில், எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒண்ணா இருக்க கத்துக்கணும் சீரியல் வரும் 2026ம் ஜூன் 29ம் தேதியில், திங்கள்கிழமை ஆரம்பமாகிறதாம். திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் மாலை 6:30 ஒளிபரப்பாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டதுள்ளது.
இதையும் படிங்க: KHxRK படத்தில் நான் நடிக்கிறேனா? நெல்சன் சார் என்ன பண்ணப்போறாருனு ஆர்வமாக இருக்கு – ஸ்ருதி ஹாசன் பேச்சு!
ஒண்ணா இருக்க கத்துக்கணும் சீரியல் புது புரோமோ வீடியோ:
குடும்பங்களின் உறவுகளை சொல்லும்.. ஒரு குடும்ப உணவகத்தின் கதை..😍
ஒண்ணா இருக்க கத்துக்கணும் – ஜூன் 29 முதல் – திங்கள் – வெள்ளி மாலை 6.30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில.. #OnnaIrukkaKaththukkanum #VijayTelevision #VijayTV pic.twitter.com/3Y6gfcqrR1
— Vijay Television (@vijaytelevision) June 19, 2026
இந்த சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில், காதல் காதல் காதல் என்ற புது சீரியல் ஒளிபரப்பாக காத்திருக்கிறது. இந்த சீரியலில் மொத்தம் 3 காதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம். இதில் பாரதி கண்ணம்மா புகழ் அருண் முக்கிய நாயனாக நடித்துவருகிறார். இந்த சீரியலும் விரைவில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாநதி சீரியலின் முடிவிற்கு பின் தொடர்ந்து புது புது சீரியல் ஒளிபரப்பாக காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.