பக்திமயத்தில் ரசிகர்கள்.. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் வரும் புது சீரியல்.. வைரலாகும் புரோமோ!
Mookuthi Amman Serial: தமிழ் தொலைக்காட்சிகளில் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். என்னதான் காலங்கள் மாறினாலும் பக்தி தொடர்களுக்கு மக்கள் மத்ஹியில் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மூக்குத்தி அம்மன் என்ற பக்தி தொடரானது ஒளிபரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் புரோமோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் மக்கள் மத்தியில் சினிமாவை விடவும் அதிகம் வரவேற்பை பெற்றுவருவதுதான் தொலைக்காட்சி சீரியல்கள் (TV Serials). அந்த வகையில் தமிழில் சன் டிவி (Sun Tv), விஜய் டிவி (Vijay Tv) மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி (Zee Tamil Tv) போன்றவை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்காக மிகவும் பிரபலமானவை. இந்த மூன்று சேனல்களுக்கு மத்தியில் டிஆர்பி ரேட்டிங் போட்டியே நடைபெறும். அதில் எப்போதும் டாப் 5 இடங்களை சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியர்களே பிடிக்கும் என்பது தெரிந்தது. அந்த வகையில் இந்த தொலைக்காட்சிகளில் பக்தி தொடர்களானது வெளியானாலும் நல்ல வரவேற்பை பெற்றுவரும். இந்நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய பக்தி தொடரானது (Bakthi Serial) ஒளிபரப்பாகவுள்ளதாம்.
மூக்குத்தி அம்மன் (Mookuthi Amman Serial) என்று இந்த சீரியலுக்கு டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் புரோமோவை சீரியல் குழு வெளியிட்டுள்ளது. தமிழில் மக்கள் மத்தியில் பக்தி தொடர்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த சீரியலும் நிச்சயம் வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இதையும் படிங்க: ரசிக்கத்தக்க குடும்ப பொழுதுபோக்கு… அர்ஜுன் தாஸின் கான் சிட்டி படம் எப்படி இருக்கு? – முதல் விமர்சனம் கொடுத்த தயாரிப்பாளர்!
ஜீ தமிழ் தொலைக்காட்சி வெளியிட்ட மூக்குத்தி அம்மன் சீரியலின் புரோமோ குறித்த பதிவு:
மூக்குத்தி அம்மன் விரைவில்…👀🔥#MookuthiAmman #ComingSoon #Promo #ZeeTamil pic.twitter.com/8Py87yFhE6
— Zee Tamil (@ZeeTamil) June 9, 2026
நமக்கு மூக்குத்தி அம்மன் என்று சொன்னாலே முதலில் நினைவிற்கு வருவது, இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம்தான். இதில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்திருந்த நிலையில், 2020ம் ஆண்டில் கொரோனா காலக்கட்டத்தில் நேரடியாக ஓடிடியில் இப்படம் வெளியானது. பக்தி, சமூக அறிவு போன்ற கதையில் வெளியான இது நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இதை போலவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்று ஒளிபரப்பாகவுள்ளது.
இதையும் படிங்க: பெண்ணியம் சார்ந்த படத்தை தயாரிக்கும் லோகேஷ் கனகராஜ்? ஹீரோயின் இவர்தான்!
மூக்குத்தி அம்மன் சீரியல் எப்போது ஒளிபரப்பாகும் :
இந்த மூக்குத்தி அம்மன் சீரியலில் சிந்து பைரவி என்ற சீரியலின் மூலமாக பிரபலமான நித்யா தாஸ், அம்மனாக நடித்துவருகிறார். இவர் ஏற்கனவே சன் தொலைக்காட்சி, விஜய் டிவி போன்ற தொலைக்காட்சி சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் ஜீ தமிழில் புதிதாக தயாராகிவரும் மூக்குத்தி அம்மன் சீரியலில் முக்கிய நடிகையாக நடிக்கிறார். இந்த சீரியலில் வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது குறித்த அறிவிப்பு எதுவும் இல்லை. மேலும் விரைவில் இந்த சீரியல் வெளியாகும் என அறிவிப்பும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.