தலைவர் 173-ல் டாக்டராக ரஜினிகாந்த்..? அஸ்வத் இயக்கத்தில் இதுவரை நடித்துடாத வேடத்தில் சூப்பர் ஸ்டார்!
Rajinikanth Thalaivar 173 Movie: ரஜினிகாந்தின் நடிப்பில் புதிய படங்கள் தொடர்ந்து உருவாகிவரும் நிலையில், இவரின் தலைவர் 173 படத்தில் பல சிக்கல்கள் இருந்துவந்தது. தற்போது இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ள நிலையில், இதுவரை நடித்திடாத வேடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu) தமிழ் சினிமாவில் பிரபலமான இளம் இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் இயக்கத்தில் இதுவரை வெறும் 2 படங்கள் மட்டுமே வெளியானாலும், இந்த இரு படங்களுக்கும் இவருக்கு எதிர்பாராத வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படங்களை அடுத்ததாக இவர் சிலம்பரசனின் (Silambarasan) STR51 என்ற படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளில் பிசியாக இருந்துவந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங்கும் 2026ம் ஆண்டில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தின் இயக்குநருக்கான குழப்பம் நீடித்துவந்தது. இப்படத்தை ஆரம்பத்தில் சுந்தர் சி (Sundar C) இயக்குவதாக அறிவிக்கப்பட்டது பின் அவர் விலகிவிட்டார். மேலும் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி (Cibi Chakaravarthi) இயக்குவதாக கூறப்பட்டது, ரஜினிக்கு கதை பிடிக்காத காரணத்தால் அவரும் அப்படத்திலிருந்து விலகிவிட்டார்.
மேலும் தற்போது 3வது அஸ்வத் மாரிமுத்து இப்படத்தில் இணைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துவந்த நிலையில், இப்படத்தின் போட்டோஷூட் சமீபத்தில் நடைபெற்றுள்ளதாம். இதில் ரஜினிகாந்த் டாக்டர் லுக்கில் இருப்பதுபோல உள்ளதாக தகவல்கள் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் இணையும் விஜய் சேதுபதி? – விவரங்கள் இதோ!
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தலைவர் 173 படத்தில் டாக்டராக ரஜினிகாந்த்:
நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து ஆக்ஷன் வேடத்தில் படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஹாஸ்டல் வார்டன், போலீஸ் மற்றும் இதரவேடங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் டாக்டர் வேடத்தில் நடித்திருந்தது மிகவும் அரிது. இந்நிலையில் தற்போது தலைவர் 173 படத்தில் டாக்டர் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நூறு சாமியில் ஸ்வாசிகாவிற்கு பதிலாக அந்த நடிகையை நடிக்கவைக்கலாம் என நினைத்தேன் – இயக்குநர் சசி!
சமீபத்தில் சென்னையில் இப்படத்திற்கான போட்டோஷூட் பணிகள் நடைபெற்றிருந்ததாகவும், அந்த ஷூட்டில் ரஜினிகாந்த் டாக்டர் வேடத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இதுபற்றிய தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.
தலைவர் 173 திரைப்படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
#Rajinikanth is set to star next in a film produced by RKFI and directed by #AshwathMarimuthu. Set construction for the project is currently underway in Poonamallee. The shooting is expected to begin by the end of this month.
A photoshoot for the film was recently completed, and… pic.twitter.com/gajylsowxi
— Movie Tamil (@_MovieTamil) June 9, 2026
தலைவர் 173 படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், இதற்கு அனிருத் இசையமைப்பதாக கூறப்படுகிறது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மற்றும் அனிருத் கூட்டணி இணையும் முதல் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.