சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 173 படம் குறித்து வைரலாகும் தகவல்
Superstar Rajinikanths Thalaivar 173 Movie Update | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வரும் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள தலைவர் 173 குறித்து தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படுபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து உலக அளவில் உள்ள ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் கூலி படம் வெளியான நிலையில் அடுத்ததாக ஜெயிலர் 2 படம் வெளியாக உள்ளது. அதன்படி அந்த ஜெயிலர் 2 படம் விநாயகர் சதுர்த்தி அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 173 மற்றும் 174 ஆகியப் படங்கள் தொடர்பான அப்டேட்கள் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில் தற்போது தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 173 படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வருகின்றது. முன்னதாக இந்தப் படத்தில் இயக்குநர்கள் சுந்தர் சி மற்றும் சிபி சக்ரவர்த்தி என அடுத்தடுத்து இரண்டு இயக்குநர்கள் அறிவிக்கப்பட்டு அவர்கள் விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அந்தப் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.




ரஜினிகாந்தின் தலைவர் 173 படம் குறித்து வைரலாகும் தகவல்:
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பாக இந்தப் படத்தில் நடிகர் கமல் ஹாசன் தயாரிக்க உள்ளார். மேலும் இந்தப் படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வைரலாகி வருகின்றது.
அதன்படி தலைவர் 173 திரைப்படத்தின் படப்பிடிப்பு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கான ஒரு அதிரடிப் பாடலுடன் (மாஸ் பாடல்) தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன அமைப்பு செய்கிறார். ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு அதிரடியான மரண மாஸ் திரைப்படம் தயாராகி வருகிறது என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Thalaivar173 – The shoot is said to begin with a mass song for #SuperstarRajinikanth, choreographed by #Sandy Master. Shooting is anticipated to start in late June or July. A marana mass movie is loading 🔥
An #AshwathMarimuthu entertainer 💥 pic.twitter.com/fjy4kxhpjc
— Movies Singapore (@MoviesSingapore) June 7, 2026
Also Read… மகன் பிறந்த நாள்… சேயோன் படக்குழுவிற்கு பிரியாணி விருந்து கொடுத்த சிவகார்த்திகேயன்