Vijay Antony: இன்னும் 3 ஆண்டுகளில் கிராமத்தில் குடிபெயர பிளான் – விஜய் ஆண்டனி பேச்சு!
Vijay Antonys Rural Life Plan: தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் நூறு சாமி என்ற படமானது வெளியாக தயாராகியுள்ளது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த இவர், இன்னும் மூன்று ஆண்டுகளில் கிராமத்தில் குடிபெயர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இயக்குநராக, இசையமைப்பாளராக, தயாரிப்பாளராக என சினிமாவில் பல்வேறு பணிகளை செய்து மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவராக இருந்துவருபவர் விஜய் ஆண்டனி (Vijay Antony). இவரின் நடிப்பில் தொடர்ந்து புதிய புதிய திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகியிருந்த படம் சக்தித் திருமகன் (Sakthi Thirumagan). கடந்த 2025ம் ஆண்டில் அரசியல் கதைக்களத்தில் வெளியாகியிருந்த இந்த படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக புதிய புதிய படங்களில் ஒப்பந்தமாகி விஜய் ஆண்டனி நடித்துவந்தார். இந்நிலையில் இயக்குநர் சசியின் (Director Sasi) இயக்கத்தில், இவர் நடித்து தயாரித்துள்ள படம்தான் நூறு சாமி (Nooru saami).
இப்படம் முழுக்க அம்மா மற்றும் கிராமப்புற கதையை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ள நிலையில், 2026 ஜூன் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தொடர்பாக சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜய் ஆண்டனி, கிராமப்புற வாழ்க்கை மற்றும் கிராமத்தில் செட்டிலாகுவது குறித்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: பிச்சைக்காரன் படம் போல நூறு சாமி படமும் ஒரு வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் – இயக்குநர் சசி!
கிராமப்புற வாழ்க்கைக்கு பிளான் குறித்து விஜய் ஆண்டனி சொன்ன விஷயம்:
அந்த நிகழ்ச்சியில் விஜய் ஆண்டனி பேசுகையில், “நூறு சாமி திரைப்படம் ஒரு உண்மையான சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள படம். மேலும் எனக்கு எளிமையான கிராம வாழ்க்கை மிகவும் பிடிக்கும். இன்னும் மூன்று ஆண்டுகளில் ஒரு நல்ல கிராமத்திற்கு குடிபெயரெலாம் என பிளான் இருக்கிறது.
இதையும் படிங்க: ஜூன் மாதம் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்படும் ஜன நாயன் படம் – தொடரும் சென்சார் சிக்கல்!
அதே நேரத்தில், கிராம மக்கள் நகர வாழ்க்கையை பார்த்து ஏமாறவேண்டாம். நகரத்தில் பெரும்பாலான மக்கள் மன அழுத்தத்துடன் வாழ்த்துவருகின்றனர். கிராமத்து வாழ்க்கையே மேம்பட்ட வாழ்க்கை. வேலையின் காரணமாக மட்டுமே நாங்கள் சென்னையில் இருக்கிறோம்” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
நூறு சாமி திரைப்படம் குறித்த விஜய் ஆண்டனி பகிர்ந்த எக்ஸ் பதிவு:
நூறுசாமி 🔥
வரும் ஜூன் 19 முதல், உலகெங்கும் உங்கள் அபிமானத்திரையரங்குகளில்😊❤️ pic.twitter.com/ZZQApBjCEU— vijayantony (@vijayantony) June 3, 2026
விஜய் ஆண்டனி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களை வெளியிட்டுவருகிறார். இவரின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள நூறு சாமி படமும், தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழி படமாகவே வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஸ்வாசிகா மிக முக்கியமான வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருடன் லிஜோமோல் ஜோஸ், அஜய் திஷன், கருணாஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் 2026 ஜூன் 19ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.