ஜூன் மாதம் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்படும் ஜன நாயன் படம் – தொடரும் சென்சார் சிக்கல்!
Jana Nayagan Movie Censor Update | தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி தொடர்ந்து வெளியீட்டில் சிக்கலை சந்தித்து வரும் ஜன நாயகன் படம் இந்த ஜூன் மாதமும் திரையரங்குகளில் வெளியாவதில் சிக்கல் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கடந்த 6 மாதங்களாக சிக்களில் உள்ள படம் ஜன நாயகன். நடிகர் தளபதி விஜய் நாயகனாக நடித்த இந்தப் படம் அவரது நடிப்பி வெளியான இறுதிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது தமிழக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருவதால் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தார். இதன் காரணமாக அவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகும் படமாக ஜன நாயகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் எச்.வினோத் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் தளபதி விஜய் உடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, நரேன், நாசர் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரடெக்ஷன் சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படம் கடந்த ஜனவரி மாதமே வெளியாகி இருக்க வேண்டிய நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த பிரச்சனை நீண்டுகொண்டே இருக்கின்றது.




ஜூன் மாதம் வெளியீட்டில் இருந்து ஒத்திவைக்கப்படும் ஜன நாயன் படம்:
‘ஜனநாயகன்’ திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகாது; தணிக்கைக் குழுவிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. ஒரு திரைப்படம் தணிக்கைக் குழுவால் இவ்வளவு நீண்ட காலம் நிறுத்தி வைக்கப்பட்டதை நான் பார்த்ததே இல்லை. வெளியீடு குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, KVN நிறுவனம் திரையரங்கு வெளியீட்டு ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, விநியோகஸ்தர்களுக்குப் பணத்தைத் திரும்ப வழங்கத் திட்டமிட்டுள்ளது. தளபதி விஜய்யின் படங்கள் எப்போதும் பல சிக்கல்களைச் சந்திப்பதுண்டு; ஆனால், இந்தப் படம் முழுமையாக இணையத்தில் கசிந்தது மற்றும் தணிக்கை தாமதம் எனப் பல கூடுதல் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. அனைத்தும் விரைவில் சரியாகும் என்று நம்புவோம்.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Jananayagan – Not Releasing in June..🚶 Still No Clearance from the Censor Board.. Never seen a movie held up by the Censor Board for so long..
Due to the uncertainty surrounding the release, KVN is set to cancel the theatrical deal and issue refunds to the distributors..… pic.twitter.com/O3MUayeUaL
— Laxmi Kanth (@iammoviebuff007) June 6, 2026
Also Read… தொடர்ந்து இரவு நேரங்களில் நடைபெறும் அரசன் பட ஷூட்டிங் – வைரலாகும் போட்டோ