தொடர்ந்து இரவு நேரங்களில் நடைபெறும் அரசன் பட ஷூட்டிங் – வைரலாகும் போட்டோ
Arasan Movie Shooting Spot Photo | நடிகர் சிலம்பரசன் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். வட சென்னை பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வரும் இந்தப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எழுதி இயக்கி வருகிறார். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான வட சென்னை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அந்தப் படத்தினை போல இந்த படமும் அப்பகுதியை மையமாக வைத்து உருவாவதால் இந்தப் படமும் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்தப் படத்தின் அறிமுக வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அந்த வீடியோவில் நடிகர் சிலம்பரசனின் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள் படம் நிச்சயமாக சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.
மேலும் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் முன்னதாக வெளியான வட சென்னை படத்தில் உள்ள கதாப்பாத்திரங்கள் இந்தப் படத்திலும் உள்ளனர் என்றும் அந்தப் படத்தின் கிளை கதை போலவே அரசன் இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலானது. மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் வட சென்னை பட நடிகர்கள் உள்ள புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது.




அரசன் படத்தின் தற்போதைய நிலை என்ன?
கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி தற்போது வரை அரசன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் அரசன் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றதாகவும் மேலும் கடந்த இரண்டு மாதங்களாக இரவு நேர ஷூட்டிங் தொடர்ந்து நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது. அந்த பதிவில் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படமும் உள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஜனநாயகன் இணையத்தில் லீக் – ஐடி ஊழியர் கைது – பரபரப்பு தகவல்
அரசன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Arasan 👑 – Rolling through endless nights and relentless schedules 🌙🔥
More than 2 months of continuous night shoots and counting.@SilambarasanTR_ #VetriMaaran @VijaySethuOffl @thondankani @anirudhofficial @theVcreations #SilambarasanTR @iYogiBabu @VelrajR @RIAZtheboss… pic.twitter.com/cy4PLrI1GS
— ARASAN Film (@Arasanfilm_) June 4, 2026
Also Read… கே.வி.ஆனந்த் இறப்பதற்கு முன் அந்த நடிகரை வைத்து படம் இயக்க நினைத்தார் – போஸ் வெங்கட் ஓபன் டாக்