RJ Balaji: கருப்பனின் தொடக்கம்.. முதல்வர் விஜயை நேரில் சந்தித்த இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி!
RJ Balaji Meets CM Vijay: கடந்த 2026 மே மாதத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவரும் கருப்பு படத்தை இயக்கிவர் ஆர்.ஜே.பாலாஜி. இவர் இன்று 2026 மே 02ம் தேதியில் தமிழக முதல்வர் விஜயை நேரில் சந்தித்துள்ளார். மேலும் அவரை சந்தித்த நெகிழ்ச்சியான தருணம் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவை பகிர்ந்துள்ளார்.
கோலிவுட் சினிமாவில் சிறு வேடத்தில் நடித்து, தற்போது நாயகனாகவும் இயக்குநராகவும் பிரம்மாண்டமாக வளர்ந்திருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தில் தி ஒன் சூர்யா (Suriya) நாயகனாக நடித்திருந்த நிலையில், அவருடன் நடிகை திரிஷா கிருஷ்ணனும் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தார். இப்படம் 2026 மே 15ம் தேதியில் வெளியாகியிருந்த நிலையில், 20 நாட்களை கடந்தும் திரையரங்குகளில் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இப்படம் சூர்யாவிற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த பிரம்மாண்ட வெற்றிப்படமாகும். இந்த படமானது இதுவரை கிட்டத்தட்ட ரூ300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப்படத்தின் கதையானது முதல் முதலாக முன்னாள் நடிகரும், தமிழக முதல்வருமான தளபதி விஜய்க்கு (CM Thalapathi Vijay) சொன்னதாக ஆர்.ஜே.பாலாஜி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று 2026 ஜூன் 02ம் தேதியில், தமிழகம் முதல்வர் தளபதி விஜயை, ஆர்.ஜே.பாலாஜி நேரில் சந்தித்துள்ளார். தனது மனைவியுடன் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தது குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: அதற்காகவே பெத்தி படம் நிச்சயம் வெற்றிபெறும் என நம்புகிறேன் – ஜான்வி கபூர்!
முதல்வர் விஜயை நேரில் சந்தித்தது குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
With the man who started it all for #Karuppu !!! ❤️❤️❤️
Wow…! Feels unreal to meet him now as the honourable Chief Minister of Tamil nadu !!!🔥🔥🔥
Same love, warmth, kindness and calmness…!!! 🙏🙏🙏
Thank you for everything dearest Vijay sir ❤️🤗🧿 pic.twitter.com/sd6qqdNUGH— RJ Balaji (@RJ_Balaji) June 2, 2026
முதல்வரை சந்தித்தது குறித்து அந்த பதிவில் ஆர்.ஜே.பாலாஜி, “கருப்பு பட இயக்கத்தை தொடங்கிவைத்த மனிதருடன் வாவ். தமிழகத்தின் மாண்புமிகு முதல்வராக அவரை சந்திப்பதை நம்ப முடியாததாக உள்ளது. அதே அன்பு, அரவநதிப்பு, கருணை மற்றும் அமைதி. அன்புள்ள விஜய் சார், எல்லாவற்றிற்கும் நன்றி” என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த் பதிவானது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.
கருப்பு திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்த தளபதி விஜய்:
கருப்பு பட ப்ரோமோஷன் பணிகளின்போது, நேர்காணல் ஒன்றில் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு திரைப்படத்தின் முதலில் தளபதி விஜய்க்கு சொல்லப்பட்டது. அவரின் இறுதி படத்திற்கான கதை தேடலின்போது சொல்லப்பட்ட கதை. அவருக்கு இப்பட கதை பிடித்திருந்தது, ஆனால அவர் வேறுமாதிரியான கதையை எதிர்பார்த்திருந்தார். அதனால் நான் இந்த கதையை சூர்யா சாரிடம் சொன்னேன்.
இதையும் படிங்க: டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் அவரது கதாப்பாத்திரம் இதுவா? வைரலாகும் தகவல்
அவருக்காக இப்படத்தில் பல விஷயங்களை மாற்றியிருக்கிறேன் என அவர் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தளபதி விஜய் தமிழக முதல்வராக பணியாற்றிவரும் நிலையில், முழுமையாக நடிப்பிலிருந்து விலகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் கடைசி படமாக உருவான ஜன நாயகன் இன்னும் வெளியாகவில்லை என்பது தெரிந்ததே.