இந்தியாவின் முக்கிய நகரங்களில் இரவு நேர வெப்பநிலை அதிகரித்து வருவதால், மக்கள் ஆண்டுதோறும் 65 முதல் 93 மணி நேரம் வரை தூக்கத்தை இழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில் சென்னை மக்கள் அதிகபட்சமாக ஆண்டுக்கு சுமார் 93 மணி நேர தூக்கத்தை இழப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்கள் உள்ளன. உடல் தூங்குவதற்கு முன் இயற்கையாகவே அதன் உட்புற வெப்பநிலை குறைய வேண்டும். ஆனால், அதிக வெப்பமும் ஈரப்பதமும் நிறைந்த இரவுகள் இந்த இயற்கையான செயல்முறையைத் தடுக்கின்றன.