AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
10 டன் மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம்.. கோட்டை மாரியம்மன் கோவிலில் தொடங்கியது ஆடிப் பண்டிகை!

10 டன் மலர்களால் அம்மனுக்கு அபிஷேகம்.. கோட்டை மாரியம்மன் கோவிலில் தொடங்கியது ஆடிப் பண்டிகை!

Sathis S
Sathis S | Updated On: 22 Jul 2026 14:44 PM IST

சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் 10 டன் மலர்களுடன் விமரிசையாக நடைபெற்ற பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டிற்கான ஆடிப் பண்டிகை திருவிழா முறைப்படி தொடங்கியது. ஆடிப் பண்டிகையை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கோவில் வளாகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுக் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சேலம், ஜூலை 22: சேலம் மாநகரத்தின் முதன்மைத் தெய்வமாக விளங்கும் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில், கோலாகலமான பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் இந்த ஆண்டிற்கான ஆடிப் பண்டிகை திருவிழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஆடிப் பண்டிகை மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆடி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமையன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களிலும் ஆடிப் பண்டிகையின் தொடக்கமாக அம்மனுக்குப் பூச்சாட்டு விழா சிறப்பாக நடைபெறுகிறது.

Published on: Jul 22, 2026 02:43 PM
Follow Us