பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் சமீபத்தில் பங்கேற்ற ஜொமேட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயலின் தலையில் பொருத்தப்பட்டிருந்த சிறிய உலோக சாதனம் இணையத்தில் பெரும் கவனம் பெற்றுள்ளது. அந்த சாதனம் என்ன என்பது குறித்து பலரும் பல்வேறு விதமாக ஊகித்த நிலையில், சிலர் அதை சூயிங்கம் என்றும், சிலர் மூளையில் பொருத்தப்பட்ட வெளிப்புற எஸ்.எஸ்.டி. என்றும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டனர். உண்மையில், அந்தச் சாதனத்தின் பெயர் ‘Temple’. இது மூளையில் ரத்த ஓட்டத்தை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பரிசோதனை அடிப்படையிலான அணியக்கூடிய சாதனம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.