AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Janhvi Kapoor: அதற்காகவே பெத்தி படம் நிச்சயம் வெற்றிபெறும் என நம்புகிறேன் – ஜான்வி கபூர்!

Janhvi Kapoor About Ram charan And Buchi Babu Sana: நடிகர் ராம் சரணின் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் பெத்தி. இதில் ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், பெத்தி படத்திற்காக ராம் சரண் மற்றும் புச்சி பாபு சனா போட்ட கடின உழைப்பு பற்றி தெரிவித்துள்ளார்.

Janhvi Kapoor: அதற்காகவே பெத்தி படம் நிச்சயம் வெற்றிபெறும் என நம்புகிறேன் – ஜான்வி கபூர்!
ராம் சரண், புச்சி பாபு மற்றும் ஜான்வி கபூர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 02 Jun 2026 16:34 PM IST

தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனாவின் (Buchi Babu Sana) இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம்தான் பெத்தி (Peddi). இதில் தெலுங்கு மெகா பவர்ஸ்டார் ராம் சரண் (Ram Charan) நாயகனாக நடித்துள்ளார். இப்படம் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே ஆர்சி16 (RC16) என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ராம் சரண் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் (Janhvi Kapoor) நடித்துள்ளார். ஜோடி இப்படத்தின் மூலம் முதல் முறையாக இணைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜான்வி கபூரின் இரண்டாவது தெலுங்கு படமாகும். இந்த பெத்தி படமானது முழுக்க விளையாட்டு மற்றும் கிராமப்புற கதைக்களத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ராம் சரண் அதிரடி மல்யுத்தம் மற்றும் கிரிக்கெட் வீரனாக நடித்துள்ளார்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், இப்படம் 2026 ஜூன் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், நடிகை ஜான்வி கபூர் கலந்துகொண்டார். அதில் அவர், ராம் சரண் மற்றும் இயக்குநர் புச்சி பாபு சனாவின் கடின உழைப்பு பற்றி பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஜன நாயகன் விஜய் பிறந்த நாளிலும் வெளியாகாதா? வைரலாகும் தகவல்

ராம் சரண் மற்றும் இயக்குநர் புச்சி பாபு சனா குறித்து நடிகை ஜான்வி கபூர் தெரிவித்த விஷயம்:

அந்த நேர்காணலில் ஜான்வி கபூர் பேசுகையில், “எனக்கு பெத்தி பட வெளியீட்டு குறித்து கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது. ராம் சரண் சார், புச்சி பாபு சனா சார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் இந்தப் படத்திற்காகக் காட்டிய அளவற்ற அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் நான் பார்த்திருக்கிறேன்.

இதையும் படிங்க: நான் இதுவரை இயக்கிய படங்களிலிருந்து வித்தியாசம்.. மஞ்சணத்தி படம் குறித்து மாரி செல்வராஜ் சுவாரஸ்ய தகவல்!

அவர்களுடைய முயற்சிகளுக்குப் பலன் கிடைக்கும் என்றும், ரசிகர்கள் இந்தப் படத்தை தங்களின் முழு அன்புடனும் ஆதரவுடனும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நான் உண்மையாகவே நம்புகிறேன்” என அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சரணின் பெத்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இப்படமானது வரும் 2026 ஜூன் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என மொத்தமாக 5 மொழிகளில் வெளியாக தயாராகியுள்ளது. இப்படமானது ஆக்ஷன், அதிரடி மற்றும் காதலை மையமாக கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தமிழ் நடிகை ஸ்ருதிஹாசனும் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us