Ram Charan: பெத்தி ஒரு இன்ஸ்பிரேஷன் படம்.. ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்த ராம் சரண்!
Ram Charan Request To Fans:டோலிவுட் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ராம் சரண். இவரின் நடிப்பில் வெளியீட்டிற்கு மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் பெத்தி. இப்படத்தின் சென்னை ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்த நிலையில், அதில் ரசிகர்களுக்கு ராம் சரண் கோரிக்கை வைத்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பிரபல நாயகனாக இருந்தாலும், தமிழ் மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் ராம் சரண் (Ram Charan). இவர் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் கேம் சேஞ்சர் (Game Changer). இன்டகி தமிழ் இயக்குநர் ஷங்கர் இயக்கியிருந்த நிலையில், எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தை அடுத்ததாக ராம் சரண் நடித்துவந்த படம்தான் பெத்தி (Peddi). இதை ஆர்.சி.16 என கடந்த 2025ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஷூட்டிங் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றுவந்தது. இதை தெலுங்கு இயக்குநர் புச்சி பாபு சனா (Buchi Babu Sana) இயக்கியுள்ள நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படம் 2026 ஜூன் 4ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் பெத்தி பட சென்னை ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றிருந்தது. அதில் ராம் சரண், இயக்குநர் புச்சி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியின்போது பேசிய ராம் சரண் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.




இதையும் படிங்க: LCU-வில் நுழைந்த மாஸ் ஹீரோ.. ராகவா லாரன்ஸின் பென்ஸ் படத்தில் இணைந்த ரவி மோகன்!
ரசிகர்களுக்கு ராம் சரண் வைத்த கோரிக்கை:
அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய ராம் சரண், “நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன், இங்கு வரும்போதெல்லாம் எனது சொந்த ஊருக்கு செல்வதுபோலவே ஒரு உணர்வு இருக்கிறது. இசை ஜாம்பவான் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இப்படத்தின் பணியாற்றியது எனக்கு மிகுந்த பெருமை.
இதையும் படிங்க: ஜன நாயகன் பட ரிலீஸ் பிரச்சனை.. உண்மையை சொல்லுற அளவுக்கு தைரியம் இல்ல – இயக்குநர் எச்.வினோத்!
பெத்தி படம் நிச்சயம் ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும். மேலும் இப்படம் முக்கிந்த ஊக்கமளிக்கும் செய்தியை கொண்ட படம். இவ்வாறு இன்ஸ்பிரேஷன் படத்தை தயவுசெய்து உங்களின் குழந்தைகளை அழைத்து சென்று இப்படத்தை பாருங்கள்” என அதில் ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து ராம் சரண் பேசியது தொடர்பான எக்ஸ் பதிவு:
#Ramcharan at #Peddi Tamil Press meet :
“I was born and brought up in Chennai and whenever I come here, it feels like coming home.
Working with the legendary ARRahman sir is a proud moment for me. This film is going to be a blockbuster. Please bring your children to watch it, as… pic.twitter.com/7ecHW3e8NL— AmuthaBharathi (@CinemaWithAB) May 30, 2026
பெத்தி படமானது அதிரடி ஆக்ஷன், காதல், எமோஷனல் மற்றும் விளையாட்டு தொடர்பான கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இதை புச்சி பாபு சனா இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இதில் ராம் சரண், ஜான்வி கபூர், சிவராஜ் குமார், ஜெகபதி பாபு மற்றும் பலர் இணையானது நடித்துள்ளனர். மேலும் இதில் ஸ்ருதிஹாசன் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.