Jana Nayagan: ஜன நாயகன் பட ரிலீஸ் பிரச்சனை.. உண்மையை சொல்லுற அளவுக்கு தைரியம் இல்ல – இயக்குநர் எச்.வினோத்!
H Vinoth About Jana Nayagan Release Issue: 2026 ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் எதிரார்பாக இருந்த படம் ஜன நாயகன். இப்படம் இணையத்தில் லீக் ஆகியும் இன்னும், இதற்கு சென்சார் கிடைக்காமல் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் எச்.வினோத், ஜன நாயகன் பட ரிலீஸ் பிரச்சனைகள் குறித்து கலகலப்பாக பேசியுள்ளார்.
கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குநர்களில் ஒருவராக புகழப்படுபவர் எச்.வினோத் (H. Vinoth). இவர் தல அஜித் குமார் (Ajith Kumar) முதல் தளபதி விஜய் (Thalapathy Vijay) போன்ற நடிகர்களுடன் திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும் இவர் கார்த்தியின் வெற்றி திரைப்படமான தீரன் அதிகாரம் 1 என்ற படத்தையும் இயக்கி பெரும் ஹிட் கொடுத்திருந்தார். அந்த வரிசையில் இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இப்படத்தில் முதல்வர் மற்றும் முன்னாள் நடிகருமான தளபதி விஜய் நடித்திருந்தார். அவருடன் பூஜா ஹெக்டே (Pooja Hegde), மமிதா பைஜூ (Mamitha Baiju) மற்றும் பாபிதியோல் உட்பட பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் 2026 ஜனவரி 9ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பின் சென்சார் பிரச்சனைகளின் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே இப்படம் முழுவதும் இணையத்தில் லீக் ஆகியிருந்த நிலையில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த வகையில், சமீபத்தில் யூடியூப் நேர்காணல் ஒன்றில் பேசிய எச்.வினோத், அதில் ஜன நாயகன் பட ரிலீஸ் சிக்கல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இதையும் படிங்க: சிக்மா படம் என் வாழ்க்கையிலே மறக்கமுடியாத பயணம் – ஜேசன் சஞ்சய்!
ஜன நாயகன் பட ரிலீஸ் குறித்து எச்.வினோத் பகிர்ந்த தகவல்:
அந்த நேர்காணலில் பேசிய எச்.வினோத், “ஜன நாயகன் பட ரிலீஸ் நம்மட்ட இல்லை. அது குறித்து உண்மையை சொல்லுற அளவுக்கு எனக்கு தைரியம் இல்ல. நான் அதை சொல்லும் தைரியம் வந்தாலும், யூடியூப்பில் போடும் தைரியம் உங்களுக்கு இல்ல அவ்ளோதான். அதனால வரும்போது பார்க்கலாம்” என அதில் அவர் கலகலப்பாக பேசியிருந்தார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: ஜூன் மாதம் வெளியாகும் யோகி பாபுவின் அர்ஜுனன் பேர் பத்து படம்
ஜன நாயகன் பட ரிலீஸ் குறித்து இயக்குநர் எச்.வினோத் பேசிய வீடியோ பதிவு:
Dir #HVinoth Recent
– The release of #JanaNayagan is not in my hands, I don’t have the courage to reveal the reality about JanaNayagan’s release and if I do say it, you won’t have the courage to upload it on YouTube.#CMJosephVijaypic.twitter.com/OoI4nWJcbJ— Movie Tamil (@_MovieTamil) May 30, 2026
ஜன நாயகன் படமானது சென்சாருக்கான பணிகளில் இருக்கிறது. இப்படத்தின் எடிட்டர் வெர்ஷன் படமானது முழுவதும் இணையத்தில் கசிந்திருந்த நிலையில், பல புதிய காட்சிகளுடன் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது. அதன் காரணமாக இதில் பல ஆக்ஷன் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாக சென்சார் சான்றிதழ் கிடைத்தால் 16 வயதிற்கு மேற்பட்டோர் மட்டும் பார்க்கும் யு/ஏ சான்றிதழ் கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.



