நடிகர் அஜித்தின் தாயார் மறைவு – முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி
முதல்வர் விஜய் சென்னை ஈஞ்சரம்பாக்கம் பகுதியில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு நேரில் வந்து மறைந்த அவரது அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதன்னதாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
சென்னை, மே 30 : தமிழ்சினிமாவின் பிரபல நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி வயது மூப்பு காரணமாக காரணமானார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மே 30, 2026 இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கார் ரேஸில் பங்கேற்பதற்காக துபாயில் இருந்த அவர் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி
இந்த நிலையில் முதல்வர் விஜய் சென்னை ஈஞ்சரம்பாக்கம் பகுதியில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டிற்கு நேரில் வந்து மறைந்த அவரது அம்மாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதன்னதாக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வீடியோ
Finally we saw them together… but at the wrong time… 💔
THALA – THALAPATHY 🫂🥺 pic.twitter.com/tcpfZcFZSr— Swara TVK ❤️💛 (@SwaraVijay_) May 30, 2026
இதையும் படிக்க : அஜித் குமார் 64 படம் உருவாவதில் தாமதமா? வைரலாகும் புது தகவல்
முன்னதாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், அருமை நண்பர் அஜித் குமாரின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
முதல்வர் விஜய்யின் பதிவு
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித்…
— CMOTamilNadu (@CMOTamilnadu) May 30, 2026
முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது இரங்கல் பதிவில், அன்புச் சகோதரர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் அஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிக்க : டியூட் பட இயக்குநரின் இயக்கத்தில் சிலம்பரசன்.. போட்டிபோடும் தயாரிப்பு நிறுவனங்கள்!
நடிகர் அஜித்தின் தாயாரின் இறுதி சடங்கு மே 31, 2026 அன்று நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில் அஜித்குமாரின் தரப்பில் வெளியான அறிக்கையில், எங்களது தாயாரின் பிரிவு ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவருடன் பகிர்ந்து கொண்ட எண்ணற்ற இனிய நினைவுகள், அவர் எங்கள்மீது பொழிந்த அளவற்ற பாசம் மற்றும் அவரது அன்பாலும் கருணையாலும் அவர் தொட்டுச் சென்ற பலரின் வாழ்வுகள் எங்களுக்கு ஆறுதலாக உள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



