AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திரைப்பட இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் மரணம் – திரையுலகினர் சோகம்

ஹரிஷ் கல்யாண், ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வில் அம்பு உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியம் உடல் நலக்கறைவால் காலமானார். எழும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் மே 28, 2026 இன்று காலமானார்.

திரைப்பட இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம் மரணம் – திரையுலகினர் சோகம்
இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 28 May 2026 16:52 PM IST

ஹரிஷ் கல்யாண், ஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் உருவான வில் அம்பு படத்தை இயக்கிய ரமேஷ் சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் மே 28, 2026 இன்று காலமானார். அவருக்கு வயது 48. இவர் எழும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் இன்று அவர் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவரது இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான கோயம்புத்தூர் சுகுனாபுரத்தில் மே 29, 2026 நாளை நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு தமிழ் திரையுலகினரிடையேயும் ரசிகர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘வில் அம்பு’ பட இயக்குநர் மரணம்

இயக்குநர் மற்றும் நடிகர் சமுத்திரக்கனியிடம் உதவி இயக்குநராக ரமேஷ் சுப்பிரமணியம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான தா என்ற படத்தை சூர்ய பிரபாகர் என்ற பெயரில் இயக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான வில் அம்பு படத்தையும் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கியுள்ளார். இந்த படத்தை இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்டோர் தயாரித்திருந்தனர். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ஸ்ரீ, ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹரிஷ் கல்யாண் இரங்கல்

 

இது குறித்து ஹரிஷ் கல்யாண் தனது இரங்கல் பதிவில், எனது திரைப்படமான “வில் அம்பு ” படத்தின் இயக்குநர் ரமேஷ் அவர்களின் திடீர் மறைவு செய்தி என்னை மிகவும் உலுக்கியுள்ளது. எனது ஆரம்ப காலங்களில் என்னை நம்பி, ஊக்கப்படுத்தி, தன்னம்பிக்கை கொடுத்த அருமையான மனிதர் அவர். அவரின் அன்பும், வார்த்தைகளும், ஊக்கமும் என்றும் நினைவில் நிற்கும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை மனமார பிரார்த்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : Silambarasan: ஷூட்டிங்கிற்கு தாமதமாக வாறாரா? சிலம்பரசன் குறித்த விமர்சனம் பற்றி அரசன் பட தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!

இந்தப் படத்தை தொடர்ந்து தி கில்லர் மேன் என்ற படத்தை ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போல்டர் கடந்த 2026 ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகியிருந்தது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் தாணு ஆகியோர் வெளியிட்டிருந்தனர். விக்ராந்த் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் பவித்ரா மாரிமுத்து, யோகி பாபு, இனிகோ பிரபாகர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாவதற்கு முன் அவர் மரணமடைந்தது திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை அவர் தனது பிக் பேங் சினிமாஸ் என்ற பெயரில் தயாரித்திருந்தார். இதன் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார்.

இதையும் படிக்க : கருப்பு படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் சொன்ன கமெண்ட்… ஆர்.ஜே.பாலாஜி ஹேப்பி அண்ணாச்சி

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை தயாரிப்பாளர் தாணு வெளியிட்டிரு்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அவர் தனது பதிவில், தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக தனது பயணத்தை தொடங்கும் இயக்குநர் ரமேஷ் சுப்பிரமணியத்தின் தி கில்லர் மேன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி. இந்த திரைப்படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என குறிப்பிட்டிருந்தார்.

Follow Us