AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Silambarasan: ஷூட்டிங்கிற்கு தாமதமாக வாறாரா? சிலம்பரசன் குறித்த விமர்சனம் பற்றி அரசன் பட தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!

S Thanu About Silambarasans Shooting Punctuality: கோலிவுட் மக்கள் மத்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது பிரபல நாயகனாக இருந்துவருபவர் சிலம்பரசன். இவர் ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருவதாக தொடர்ந்து அவர்மீது புகார்கள் எழுந்த நிலையில், அது குறித்து அரசன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு விளக்கம் கொடுத்துள்ளார்.

Silambarasan: ஷூட்டிங்கிற்கு தாமதமாக வாறாரா? சிலம்பரசன் குறித்த விமர்சனம் பற்றி அரசன் பட தயாரிப்பாளர் சொன்ன விஷயம்!
சிலம்பரசன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 28 May 2026 11:55 AM IST

நடிகர் சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில் கோலிவுட் சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்டமான திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக தக் லைஃப் (Thug Life) என்ற படமானது கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இப்படத்தில் கமல்ஹாசன் நாயகனாக நடித்திருந்த நிலையில், அவருடன் இரண்டாவது நாயகனாக சிலம்பரசன் நடித்திருந்தார். இப்படத்தையடுத்து கிட்டத்தட்ட 3 இயக்குநர்களுடன் படங்களில் சிலம்பரசன் ஒப்பந்தமாகியிருந்தார். மேலும் இவர் திடீரென இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran) இயக்கத்தில் அரசன் (Arasan) திரைப்படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். இப்படத்தின் புரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங்ப்பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், சிலம்பரசன் ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருவதாக வட்டாரங்களில் விமர்சனங்கள் எழுந்துவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அரசன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, சிலம்பரசன் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 படத்தில் அந்த பாலிவுட் நடிகரின் கேமியோ இருக்கா? வைரலாகும் தகவல்

சிலம்பரசன் குறித்து அரசன் பட தயாரிப்பாளர் பகிர்ந்த விஷயம்:

அந்த நேர்காணலில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில், “சிலம்பரசன் முதலில் தேசிங் பெரியசாமியின் இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக தலைமுடியை வளர்த்துவந்தார். ஆனால் அரசன் பட கதையை கேட்டதும் அவர், அந்த படத்தை பின்னரும் தள்ளிவைத்துவிட்டார். அரசன் படத்திற்காக தனது தோற்றத்தை மாற்றிக்கொண்டார். இப்படத்தின் கதாபாத்திரமாகவே வாழ தொடங்கிவிட்டார். அதே நேரத்தில், அவருக்கு எவ்வளவு நேரத்ம் படப்பிடிப்பு நேரம் ஒதுக்கப்பட்டாலும், அவர் அதற்கு ஒரு மேணிநேரம் முன்னதாகவே வந்துவிடுவார்.

இதையும் படிங்க: கருப்பு படத்துக்கு சப்போர்ட்.. நீதித்துறையை வெளுத்து வாங்கிய நீதிபதிகள்.. என்ன நடந்தது?

அவர் ஒருபோதும் ஷூட்டிங்கிற்கு தாமதமாக வந்ததில்லை. அவரை ஏன் ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருகிறார் என விமர்சிக்கப்படுகிறார் என எனக்கு தெரியவில்லை. அரசன் படத்தில் இசையமைக்க சிலம்பரசன்தான் அனிருத்திடம் கேட்டுக்கொண்டார். மேலும் சமீபத்தில் வெற்றிமாரசன் அரசன் பட காட்சி ஒன்றை என்னிடம் காட்டினார். அதில் எஸ்.டி.ஆர். நடந்துவரும் ஒரு சீன் , அவர் லட்டு போலவே இனிமையாக தெரிந்தார்” என்று அதில் அவர் கூறியுள்ளர்.

சிலம்பரசன் பற்றி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பகிர்ந்து பற்றிய பதிவு:

அரசன் திரைப்படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us