ஜெயிலர் 2 படத்தில் அந்த பாலிவுட் நடிகரின் கேமியோ இருக்கா? வைரலாகும் தகவல்
Jailer 2 Movie Cameo Role Update Viral On Social Media | பாலிவுட் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வந்தாலும் உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. சினிமாவில் 50 வருடங்களுக்கு மேலாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் 75 வயதைக் கடந்தும் தொடர்ந்து படு பிசியாக நடித்து வருகிறார். தனது நடிப்பில் உருவாகும் படம் வருடத்திற்கு ஒன்றாவது வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். அதன்படி கடந்த 2025-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் தற்போது இந்த 2026-ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இவர்களின் கூட்டணியில் வெளியான ஜெயிலர் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியானதி இருந்து தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தமிழ் சினிமாவில் பிரப்லா தயாரிப்பு நிறுவனமாக வலம் வரும் சன் பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் வெளியீட்டிற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.




ஜெயிலர் 2 படத்தில் அந்த பாலிவுட் நடிகரின் கேமியோ இருக்கா?
இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தில் பான் இந்திய நடிகர்கள் பலர் கேமியோ வேடத்தில் நடித்து இருந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்திலும் பலர் நடித்து உள்ளனர். மேலும் பாலிவுட் சினிமாவில் இருந்து பல பிரபலங்களின் பெயர்கள் வரிசையாக அடிபட்டு வந்த நிலையில் தற்போது நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஜெயிலர் 2 படத்தில் கேமியோ செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… சூர்யா சார் ஒரு சிறந்த மனிதர் – நடிகர் நஸ்லேன் புகழாரம்
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Jailer2 BUZZ – #HrithikRoshan is now said to be in talks for a cameo role, sharing screen space with #SuperstarRajinikanth 🔥 Initially, talks were said to have happened with #ShahRukhKhan, but it didn’t materialise. pic.twitter.com/Mw4p2nmJWk
— Movies Singapore (@MoviesSingapore) May 27, 2026
Also Read… சர்வம் மாயா படத்தில் டெலுலுவாக நான் தான் நடிக்க வேண்டியது – நடிகை ப்ரீத்தி முகுந்தன் ஓபன் டாக்