அந்த காரணத்திற்காக தலைவன் தலைவி படத்தில் நடிக்க மிஷ்கினிடம் கேட்கவில்லை – இயக்குநர் பாண்டிராஜ் ஓபன் டாக்
Director Pandiraj talks about Mysskin: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் பரிமளா அண்ட் கோ படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் பட விழாவில் இயக்குநர் மிஸ்கின் குறித்து பாண்டிராஜ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் பாண்டிராஜ். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பான்மையான படங்கள் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்தே வெளியாகி வருகின்றது. மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான படங்களில் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் பலர் நடித்து உள்ளனர். அதன்படி இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் இதுவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி, சூர்யா மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் நடித்து உள்ளனர். இந்தப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் பரிமளா அண்ட் கோ. இந்தப் படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. காமெடியை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் ஜெயராம் மற்றும் ஊர்வசி முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் விழா சமீபத்தில் நடைப்பெற்ற போது இயக்குநர் மிஷ்கின் குறித்து இயக்குநர் பாண்டிராஜ் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




அதற்காக தலைவன் தலைவி படத்தில் நடிக்க மிஷ்கினிடம் கேட்கவில்லை:
இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது, உண்மையில், தலைவன் தலைவி படத்தில் மிஷ்கின்தான் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர் மிக அதிக சம்பளம் கேட்பதால், நாங்கள் அவரை அணுகவில்லை. அவர் ஒரு யானை அல்ல, ஒரு டைனோசர். அவரை உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால், அவர் ஒரு பொக்கிஷம். ஆனால் அவரைக் கையாள்வது என்பது ஒரு சித்திரவதை. அவரது சம்பளம் மிக அதிகம். அவரைச் படப்பிடிப்புத் தளத்திற்குக் கொண்டு வருவதே பெரும் சிரமம். இருப்பினும், மிஷ்கினைப் போன்ற ஒருவரால்தான் இந்தக் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்ய முடியும் என்று தெரிவித்து இருந்தார். இது தற்போது வைரலாகி வருகின்றது.
இணையத்தில் வைரலாகும் இயக்குநர் பாண்டி ராஜ் பேச்சு:
Dir. #Pandiraj Recent:
Dir #Myskin was actually supposed to act in ‘#ThalaivanThalaivii’. But we didn’t approach him because he asks for a very high salary. He’s not an elephant… he’s a dinosaur. If you can control him, he’s gold. But handling him is torture. His salary is… pic.twitter.com/O9ikSLb642
— Movie Tamil (@_MovieTamil) May 23, 2026
Also Read… Karuppu: கருப்பு படத்தில் துரை சிங்கம் என்ட்ரி.. ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி!