AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

15 அன்கட் வெர்ஷனில் வெளியானது கருப்பு படம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Karuppu Movie 15 Uncut Version | தமிழ் சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு. இந்தப் படத்தில் 15 அன்கட் வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளது தற்போது வைரலாகி வருகின்றது.

15 அன்கட் வெர்ஷனில் வெளியானது கருப்பு படம்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
கருப்புImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 May 2026 15:52 PM IST

தமிழ் சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகி தற்போது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது கருப்பு படம். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து உள்ளார். இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்த கருப்பு படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் படத்தில் முக்கிய வேடத்திலும் அவர் நடித்து உள்ளார். மேலும் இந்தப் படத்தில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், இந்திரன்ஸ், நட்டி நடராஜன், மன்சூர் அலிகான், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, ஜார்ஜ் மரியன், லொள்ளு சபா மாறன், தீபா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தினை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து இருந்தார். மேலும் இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.

15 அன்கட் வெர்ஷனில் வெளியானது கருப்பு படம்:

இந்த நிலையில் படம் தமிழ் சினிமாவில் வெளியாகி இருந்தாலும் உலக அளவில் இந்தப் படத்தை மக்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் கருப்பு படம் இதுவரை உலக அளவில் ரூபாய் 207 கோடி வசூலித்து உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த கருப்பு படத்தின் 15 அன்கட் வெர்ஷனை இங்கிலாந்தில் Cineworld மற்றும் Vue திரையரங்குகளில் வெளியிட்டுள்ளனர். இது அங்கு உள்ள சூர்யா ரசிகர்களிடையே மகிழ்சியை ஏற்படுத்தி வருகின்றது. படம் வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்ற நிலையில் நிச்சயமாக படம் ரூபாய் 300 கோடிகளை உலக அளவில் வசூலிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… அன்றே கணித்தார் வெங்கட் பிரபு… இணையத்தில் வைரலாகும் பிரேம்ஜி வெளியிட்ட எக்ஸ் தள பதிவு

கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Karthik Subbaraj: இளையராஜாவுடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு.. தனது புதிய படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட பதிவு!

Follow Us