வெளியானது ப்ளாஸ்ட் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ
The Life Lyric Video From Blast Movie | நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் வெளியாக உள்ள படம் ப்ளாஸ்ட். இந்தப் படத்தில் இருந்து தற்போது தி லைஃப் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு வெளியிட்டு உள்ளது.
நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் தற்போது உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ப்ளாஸ். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அர்ஜுன். இவரை ஆக்ஷன் கிங் என்று ரசிகர்கள் அன்புடன் அழைத்து வருகின்றனர். தொடர்ந்து தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய மொழிகளிலும் பலப் படங்களில் நடித்து உள்ளார் நடிகர் அர்ஜுன். இவரது நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் தீயவர் குலை நடுங்க என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்தப் படத்தை இயக்குநர் தினேஷ் லக்ஷ்மனன் எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் அர்ஜுன் உடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அபிராமி வெங்கடாசலம் உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன் சீதா பயணம் என்ற படத்தை எழுதி இயக்கினார். மேலும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்திலும் நடித்து இருந்தார். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் வெளியான நிலையில் அர்ஜுனின் மகள் நடிகை ஐஸ்வர்யா நாயகியாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்து தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் ப்ளாஸ்ட். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.




வெளியானது ப்ளாஸ்ட் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் வீடியோ:
அதன்படி நடிகர் அர்ஜுன் நாயகனாக நடித்து உள்ள இந்த ப்ளாஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்து உள்ளார். மேலும் நடிகை பிரீத்தி முகுந்த் உடன் இணைந்து பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படம் வருகின்ற 28-ம் தேதி மே மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிளான தி லைஃப் என்ற பாடலின் லிரிக்கள் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… ஜார்ஜ் குட்டியின் குடும்பத்திற்கு என்ன ஆனது? த்ரிஷ்யம் 3 படத்திற்கு மக்கள் கொடுத்த விமர்சனம் இதோ
ப்ளாஸ்ட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#TheLife – BlastSecondSingle is out now ♥️
▶️ https://t.co/EGZA57SHN6#BlastFromMay28#KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh@archanakalpathi @aishkalpathi @venkat_manickam @Ags_production@akarjunofficial @PreityMukundan @abhiramiact @highonkokken @arjunchdmbrm… pic.twitter.com/3RsDBtFcwM
— Archana Kalpathi (@archanakalpathi) May 21, 2026
Also Read… துல்கர் சல்மானின் ஐ அம் கேம் படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்தது படக்குழு