கேஜிஎஃப் 3 மற்றும் சலார் 2 திரைப்படங்கள் உருவாகுமா? இயக்குநர் பிரஷாந்த் நீல் சொன்ன விஷயம்!
Prashanth Neel About KGF 3 And Salaar 2: தென்னிந்திய சினிமாவில் கேஜிஎஃப் 1 மற்றும் 2 போன்ற படங்களை இயக்கி மிக பிரபலமான இயக்குநர் பிரஷாந்த் நீல். இவர் தற்போது ஜூனியர் என்டிஆர்-யின் ட்ராகன் திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்நிலையில், இதையடுத்து கேஜிஎஃப் 3 மற்றும் சலார் 2 போன்ற படங்கள் உருவாகுமா? என்பது குறித்து விவரமாக பேசியுள்ளார்.
கன்னட சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் பிரஷாந்த் நீல் (Prashanth Neel). இவரின் இயக்கத்தில் இதுவரையில் மொத்தமே 4 படங்கள் வெளியாகியிருக்கிறது. வெளியாகியிருந்த இந்த நான்கு படங்களிலும் சூப்பர் டூப்பர் ஹிட். அதிலும் கேஜிஎஃப் 1, 2 (KGF 1 & 2) போன்ற படங்கள் ஒட்டுமொத்த இந்திய மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானது. அந்த வகையில் கன்னட இயக்குநராக இருந்த இவர், பிரபாஸின் (Prabhas) சலார் (Salaar) என்ற படத்தை இயக்கி தெலுங்கு சினிமாவிலும் இயக்குநராக நுழைந்தார். இந்த படமானது சிறப்பான வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் படமாக மாறியிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக மீண்டும் தெலுங்கு சினிமாவில் இவர் இணைந்திருக்கும் படம்தான் டிராகன் (Dragon). இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் (Jr NTR) ஹீரோவாக நடிக்க, அவருடன் ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நாயகியாக நடித்துவருகிறார்.
இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பையு பெற்றிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்த இயக்குநர் பிரஷாந்த் நீல், சலார் 2 மற்றும் கேஜிஎஃப் 3 போன்ற திரைப்படங்கள் உருவாகுமா என்பது குறித்து விளக்கமாக பேசியுள்ளார்.




இதையும் படிங்க: ஒரு முழுமையான மாஸ் கமர்ஷியல் பிளாக்பஸ்ட்.. கருப்பு படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!
சலார் 2 மற்றும் கேஜிஎஃப் 3 படங்கள் உருவாகுமா என்பது குறித்து இயக்குநர் பிரஷாந்த் நீல் சொன்ன விஷயம்:
அந்த நேர்காணலில் பேசியிருந்த இயக்குநர் பிரஷாந்த் நீல், “தற்போது நான் ஜூனியர் என்டிஆர்-யின் டிராகன் படத்திற்காக நாங்கள் எழுதியுள்ள கதையின் மீது முழு ஈடுபாடும் கொண்டிருக்கிறேன். அதனால் என் கவனமானது முழுவதும் தற்போது டிராகன் திரைப்படத்தின் மீதே உள்ளது. தற்போதைக்கு அதைத் தாண்டி என்னால் எந்த படத்தையோ, அல்லது வேறு படம் குறித்தோ நினைக்கவில்லைனு.
இதையும் படிங்க: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு அந்த பிரபலத்துடன் திருமணமா? வைரலாகும் தகவல்
ஆனாலும் சலார் 2 மற்றும் கேஜிஎஃப் 3 போன்ற படங்களை குறித்து கலந்துரையாடல்களும் அவ்வப்போது நடக்கும்” என அவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சலார் 2 மற்றும் கேஜிஎஃப் 3 போன்ற படங்களை இயக்குகிறேன் என சொல்லாமல், இந்த இரு படங்களும் நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என்பதுபோல இயக்குநர் பிரஷாந்த் நீல் ஹின்ட் கொடுத்துள்ளார்.
சலார் 2 மற்றும் கேஜிஎஃப் 3 போன்ற திரைப்படங்கள் குறித்து இயக்குநர் பிரஷாந்த் நீல் பேசியது தொடர்பான பதிவு:
Dir #PrashanthNeel about #KGF3 & #Salaar2
– So, I have a responsibility right now toward the story we have written for #DRAGON, and toward the people who are working on it.
– My focus right now is completely on Dragon. I don’t think I can think beyond that at the moment.
— Movie Tamil (@_MovieTamil) May 21, 2026
தற்போது முழுக்க முழுக்க இவர் டிராகன் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்துவருகிறார். இப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவரும் நிலையில், பாலிவுட் நடிகரும் இதில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில், 2027ம் ஆண்டு ஜூன் 11ம் தேதியில் இப்படத்தை வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது