Atlee: ஒரு முழுமையான மாஸ் கமர்ஷியல் பிளாக்பஸ்ட்.. கருப்பு படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!
Atlee Kumar Praised Suriya Karuppu Movie: தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகி பேசப்படும் இயக்குநர்களில் ஒருவர்தான் அட்லீ. சமீபத்தில் திரையரங்கில் சூர்யாவின் கருப்பு படத்தை பார்த்த இவர், அதை பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து விவரமாக பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, தற்போது இந்தி மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் படங்களை இயக்கிவருபவர் அட்லீ குமார் (Atlee Kumar). இவர் தனது சினிமா வாழ்க்கையின் ஆரம்பத்தில், இயக்குநர் எஸ்.சங்கரின் (S.Sankar) உதவி இயக்குநராக பணியாற்றிவந்தவர். இதையடுத்து கடந்த 2013ம் ஆண்டில் வெளியான ராஜா ராணி (Raja Rani) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் அவருக்கு வெற்றியை கொடுக்க, தனது 2வது படத்தையே தளபதி விஜயை (Thalapathy Vijay) வைத்து இயக்கியிருந்தார். இப்படமும் இவருக்கு வெற்றியை கொடுக்க கிட்டத்தட்ட 3 படங்கள் விஜய்யுடன் இணைந்து பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் வெளியான கருப்பு (Karuppu) படமானது திரையரங்குகளை தெறிக்கவிட்டுவரும் நிலையில், இப்படத்தை இயக்குநர் அட்லீயும் (Atlee Kumar) பார்த்துள்ளார். அந்த வகையில் இப்படத்தை மற்றும் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியையும் பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தருக்கு அந்த பிரபலத்துடன் திருமணமா? வைரலாகும் தகவல்
கருப்பு படத்தை பாராட்டி இயக்குநர் அட்லீ சொன்ன விஷயம்:
அந்த பதிவில் இயக்குநர் அட்லீ, “கருப்பு திரைப்படம் பிரமாதமாக இருந்தது, பார்ப்பதற்கு மிகவும் பொழுதுபோக்காக இருந்தது,குடும்ப ரசிகர்களுக்கு ஒரு முழுமையான விருந்து. இதை திரையரங்கில் தவறவிடாதீர்கள், ஒரு முழுமையான மாஸ் கமர்ஷியல் பிளாக்பஸ்ட்.
இதையும் படிங்க: தீபாவளியை குறி வைக்கும் சிலம்பரசனின் அரசன் படக்குழு… வைரலாகும் ரிலீஸ் அப்டேட்!
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி ப்ரோ-விற்கு வாழ்த்துக்கள். சூர்யா சார், கலக்கிவிடீர்கள். மேலும் படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும் ஒளிப்பதிவாளர் ஜி.கே.விஷ்ணு, வெறித்தனமாக எடுத்திருக்கீர்கள். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெறித்தனமான வேலை” என அவர்களை பாராட்ட அந்த பதிவில் பகிர்ந்துள்ளார்.
கருப்பு படத்தை இயக்குநர் அட்லீ பாராட்டியது தொடர்பாக இணையத்தில் வைரலாகும் பதிவு:
Oru padam pannu na anna kooda ! 😌 @Atlee_dir @Suriya_offl ✨ #karuppu #suriya #atlee 🖤 pic.twitter.com/gzLrmmre28
— Surya (@Suryahere_offl) May 21, 2026
நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்திலும் 2026 மே 15ம் தேதியில் வெளியாகியிருந்த திரைப்படம்தான் கருப்பு. இப்படமானது முழுக்க பக்தி, ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியிருந்த நிலையில், மக்கள் மத்தியில் திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகிவருகிறது. அந்த வகையில் இப்படத்தை பல்வேறு நடிகர்கள், இயக்குநர்களும் பாராட்டிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.