AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தீபாவளியை குறி வைக்கும் சிலம்பரசனின் அரசன் படக்குழு… வைரலாகு ரிலீஸ் அப்டேட்!

Silambarasans Arasan Movie Release Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அரசன். இந்தப் படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தீபாவளியை குறி வைக்கும் சிலம்பரசனின் அரசன் படக்குழு… வைரலாகு ரிலீஸ் அப்டேட்!
அரசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 21 May 2026 10:57 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிலம்பரசன். இவர் கைக் குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் நடிக்க வந்துவிட்டதால் இவருக்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நடிகர் சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிறகு தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்கத் தொடங்கினார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் சிலம்பரசனுக்கு சினிமாவில் ஒரு சருக்கல் காலம் இருந்தது. அந்த காலகட்டத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகும் பெரும்பாண்மையான படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்தது. மேலும் திரைத்துறையினர் பலர் சிலம்பரசன் மீது தவறான விமர்சனங்களை வைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பல நெகட்டிவான விமர்சனங்களை சிலம்பரசன் பெற்று வந்தாலும் அவரது ரசிகர்கள் அவரை விட்டுக்கொடுக்கவே இல்லை. அதன்படி அவரது ரசிகர்களின் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக ஒரு கம்பேக்கை கொடுத்தார் சிலம்பரசன். அந்த கம்பேக்கிற்கு பிறகு சிலம்பரசன் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தீபாவளியை குறி வைக்கும் சிலம்பரசனின் அரசன் படக்குழு:

இந்த நிலையில் நடிகர் சிலம்பரசன் தற்போது தனது 50-வது படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் உடன் கூட்டணி வைத்துள்ளார். அரசன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த அரசன் படத்தின் நாயகி யார் என்று இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் ஒவ்வொரு நடிகையின் பெயரும் தொடர்ந்து அடிபட்டு வருகின்றது.

அந்த வகையில் தற்போது இந்த அரசன் படத்தில் பிரியங்கா மோகன் நடித்து வருவதாக கூறப்படுகின்றது. மேலும் இந்த அரசன் படத்தின் ரிலீஸ் இந்த 2026-ம் ஆண்டிலேயே இருக்கும் என்று முன்னதாக படக்குழு தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது அரசன் படத்தின் ரிலீஸ் தொடர்பான அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதபடி படம் வருகின்ற 2026-ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… Pooja Hegde: சினிமாவில் வெற்றி தோல்விகள்.. மனம் திறந்து பேசிய பூஜா ஹெக்டே!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க நடிகை நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு? ஒரு நாளுக்கு இவ்வளவா?

Follow Us