டியூட் பட இயக்குநருடன் இணைந்த சிலம்பரசன்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?
STR Next Movie Update: டியூட் படத்தை அடுத்ததாக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் சிலம்பரசன் புதிய படத்தில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் மற்றும் தயாரிப்பு நிறுவனம் எது என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் கடந்த 2025ம் ஆண்டு வெளியான பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) டியூட் (Dude) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran). இவரின் இயக்கத்தில் வெளியான டியூட் படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்த டியூட் படத்தை இயக்குவதற்கு முன் இயக்குநர் கீர்த்திஸ்வரன், பெண் இயக்குநர் சுதா கொங்கராவின் (Sudha Kongara) இயக்கத்தில் வெளியான படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளாராம். சூரரை போற்று, இறுதிச்சுற்று போன்ற படங்களில் பணியாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் டியூட் பட வெற்றியை அடுத்ததாக சிலம்பரசனின் (Silambarasan) நடிப்பில், கீர்த்திஸ்வரன் புதிய படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது.
சிலம்பரசன் தற்போது அரசன் (Arasan) படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கும் நிலையில், இதன் ஷூட்டிங்கை முழுமையாக முடித்தவுடன் கீர்த்திஸ்வரன் இயக்கும் படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் ஷூட்டிங் எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: சுவாரஸ்யமான திருப்பம்… தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு!
கீர்த்திஸ்வரன் – சிலம்பரசன் கூட்டணி பட ஷூட்டிங்:
இயக்குநர் கீர்த்திஸ்வரன் தனது இரண்டாவது படத்திலே சிலம்பரசனை வைத்து படத்தை இயக்கவுள்ளார். இப்படமானது ஒரு கல்லூரில் நடைபெறும் கதையை மையமாக வைத்து இயக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் கதை சிலம்பரசனுக்கு பிடித்த நிலையில், அரசன் பட ஷூட்டிங்கை அடுத்து இதில் இணையவுள்ளார் என கூறப்படுகிறது. அதன்படி வரும் 2026 ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என தகவல்கள் வைரலாகிவருகிறது. ஆனால் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் எது என இன்னும் உறுதியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆர்.ஜே.பாலாஜியின் வளர்ச்சியை வியந்து பார்க்கிறேன்.. கருப்பு பட கதையை கேட்டதும் உடனே ஓகே சொல்லிட்டேன் – சூர்யா பேச்சு!
சிலம்பரசன் மற்றும் கீர்த்திஸ்வரன் கூட்டணி பட ஷூட்டிங் அப்டேட் பதிவு:
After #Arasan, #SilambarasanTR is reportedly set to act in a new film directed by #Keerthiswaran, who previously directed Dude. The shooting of this film is said to begin in August or September. It remains to be seen who will produce this project.
As Per TOURING TALKIES,#STR51 pic.twitter.com/3XuO6xQ4AN
— Movie Tamil (@_MovieTamil) May 3, 2026
சிலம்பரசன் – அஷ்வத் மாரிமுத்து கூட்டணி நிலை என்ன :
சிலம்பரசன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து கூட்டணியில் STR51 திரைப்படமானது உருவாகவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அஷ்வத் மாரிமுத்து, ரஜினிகாந்தை வைத்து தலைவர் 173 படத்தை இயக்குவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சிலம்பரசனின் STR51 படத்தின் ஷூட்டிங் ஒத்திவைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சிலம்பரசன் இயக்குநர் கீர்த்திஸ்வரனின் இயக்கத்தில் புது படத்தில் இணைவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.