Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Keerthiswaran: டியூட் படத்தின் கதையை ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் எழுதினேன் – கீர்த்திஸ்வரன் பேச்சு!

Keerthiswaran About Dude Movie Story Writing: தமிழில் தனது இயக்கத்தில் வெளியான முதல் படத்தின் மூலமாகவே பிரபலமானவர் கீர்த்திஸ்வரன். இவர் இயக்கத்தில் சமீபத்தில் டியூட் படமானது வெளியாகி எதிர்பாராத வரவேற்பை பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதையை எவ்வாறு எழுதினார் என்பது குறித்து ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பாரக்கலாம்.

Keerthiswaran: டியூட் படத்தின் கதையை ஆரம்பத்திலிருந்தே அப்படித்தான் எழுதினேன் – கீர்த்திஸ்வரன் பேச்சு!
பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்திஸ்வரன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 28 Oct 2025 16:46 PM IST

தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்படும் இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran). இவர் கடந்த 2025 அக்டோபர் 17ம் தேதியில் வெளியான டியூட் (Dude) என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் மூலமாகத்தான் இவர் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் வெளியான டியூட் படமானது ஆரம்பத்தில் மக்களிடையே நெகடிவ் விமர்சனங்களை பெற்றுவந்தாலும், தற்போது பாசிடிவ் விமர்சனங்களுடன் மக்களிடையே ஈர்க்கப்பட்டுவருகிறது. இந்த திரைப்படத்தில் முன்னணி வேடத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிக்க, அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்திருக்கிறார். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகி நரசிகர்கள் மத்தியில் ஈர்க்கப்பட்டுவந்தது.

இந்நிலையில் இதுவரை சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றியையும் பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட டியூட் பட இயக்குநர், இப்படத்தின் கதையை எவ்வாறு எழுதியிருந்தார் என்பது பற்றி ஓபனாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: விஜய் ஆண்டனியின் சக்தி திருமகன் படத்தை வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் சங்கர்!

டியூட் படத்தின் கதையை எவ்வாறு எழுதியது குறித்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் சொன்ன விஷயம் :

அந்த நேர்காணலில் பேசிய கீர்த்திஸ்வரன், ” நான் டியூட் படத்தின் கதையை ஓப்பனிங் கடைசியில் இருந்துதான் எழுதவே ஆரம்பித்தேன். மற்ற இயக்குனர்கள் போல கதையை முழுஇவதுமாக எழுதி அதிலிருந்து, காட்சிகளை தனியாக எழுதவில்லை. படத்தின் ஓப்பனிங்கில் என, நடக்கிறது என, பாதி பாதியாக எழுதினேன். நான் மக்களுக்கு ஒரு பொழுதுபோக்காக முதல் ஓப்பனிங் காட்சியில் என்ன வைக்கமுடியும் என நினைத்தேன். அதை போல முதல் ஓப்பனிங் காட்சியில் கல்யாண ரிசப்ஷனில் தெரியாமல் ஒருவர் தாலியை அறுத்தால் என்ன நடக்கும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க : கருப்பு பட வெளிநாட்டு ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்.. எத்தனை கோடிகளுக்கு விற்பனையானது தெரியுமா?

அது மக்கள் மத்தியில் மிகவும் சீக்கிரமாக அவர்களை படத்திற்குள் கொண்டு செல்லும் என நினைத்தேன். இந்த காட்சி முடிந்தால் அடுத்து என்னவாகும், மேலும் இதன் மூலம் என்ன நடக்கும் என இந்த படத்தின் கதையை சீன் பை சீனாக எழுதினேன்” என அவர் அதில் தெரிவித்திருந்தார். இது தொடர்பான தகவல் இணையாயத்தில் வைரலாகிவருகிறது.

டியூட் படம் குறித்து இயக்குநர் கீர்த்திஸ்வரன் வெளியிட்ட எக்ஸ் பதிவு :

டியூட் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது :

இந்த டியூட் படமானது 2025ம் ஆனது தீபாவளியை முன்னிட்டு வெளியான நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படம் எமோஷனல், காதல், காமெடி போன்ற மாறுபட்ட கதைக்களத்தில் வெளியாகியிருந்தது. பொதுவாக படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 4 அல்லது 6 வாரங்களுக்குள் ஓடிடியில் வெளியாகிவிடும் அந்த வகையில், இந்த டியூட் படம் வரும் 2025 நவம்பர் 14ம் தேதிக்குள் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது