Atharvaa: நான் பட இயக்குநருடன் கைகோர்த்த அதர்வா.. வெளியானது புது படத்தின் டைட்டில் டீசர்!
Atharvaa New Movie Title Teaser: தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் அதர்வா. இவர் தற்போது இயக்குநர் ஜீவா சங்கர் இயக்கத்தில் புது படத்தில் இணைந்துள்ளர். இந்நிலையில் இன்று 2026 பிப்ரவரி 6ம் தேதியில் இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
90ஸ் நடிகர் முரளியின் மூத்த மகன்தான் நடிகர் அதர்வா (Athrvaa). இவர் தற்போது சினிமாவில் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் பராசக்தி (Parasakthi). இப்படத்தை இயக்குநர் சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்க, நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் சிவகார்த்திகேயனின் தம்பியாக நடிகர் அதர்வா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக இதயம் முரளி (Idhayam Murali) மற்றும் அட்ரஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தற்போது இயக்குநர் ஜீவா சங்கர் (Jeeva Shankar) இயக்கத்தில் புது படத்தில் இணைத்துள்ளார். இயக்குநர் ஜீவா சங்கர் ஏற்கனவே நான், அமரகாவியம் மற்றும் எமன் போன்ற படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த விதத்தில் அதர்வா மற்றும் ஜீவா சங்கர் கூட்டணி புது படத்திற்காக இணைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு “வலை” (Valai) என படக்குழு டைட்டிலை வைத்துள்ளது. இது தொடர்பான வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுவருகிறது.




இதையும் படிங்க: ‘வித் லவ்’ பட ரிலீஸ்.. திரையரங்கில் அலைமோதும் ரசிகர்கள் கூட்டம் – வைரலாகும் வீடியோ!
நடிகர் அதர்வாவின் புது திரைப்படத்தின் டைட்டில் டீசர் குறித்த பதிவு:
Get ready to get captured by #VALAI 🌊
Teaser ▶️ https://t.co/vhS2O6amCq
Starring @Atharvaamurali @vanibhojanoffl @TheRupaManjari #MuraliSharma 🫶🏻
A @JeevaSankar Directorial 🎬
A @GhibranVaibodha musical 🎶
Stay tuned⏳#PepsiVSBalamurali @RaadhuInfo@editorsuriya… pic.twitter.com/O9OIOTsu0y
— Lahari Music (@LahariMusic) February 6, 2026
அதர்வா இப்படத்தின் ரெட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படும் நிலையில், இதில் நடிகைகள் வாணி போஜன் மற்றும் ரூப மஞ்சரி போன்ற நடிகைகள் இணைந்து நடிக்கவுள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இந்த படமானது வித்தியாசமான திரில்லர் கதைக்களத்தில் உருவாகவுள்ளதாம். இப்படம் நடிகர் அதர்வா கடற்கரையில் வசிக்கும் மீனவ இளைஞராக நடித்துவருகிறார்.
இதையும் படிங்க: கென் கருணாஸின் ‘யூத்’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ்.. நகைச்சுவையாக வெளியான வீடியோ இதோ!
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் ஏற்கனவே நடைபெற்றுவரும் நிலையில், தற்போது இப்படத்தின் டைட்டில் டீசர் பதிவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. அதர்வாவின் நடிப்பில் ஏற்கனவே 2 படங்கள் வெளியாக காத்திருக்கும் நிலையில், இந்த் புது திரைப்படமானது 2026ம் ஆண்டு இறுதியில் அல்லது வரும் 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிடுவதற்காக படக்குழு திட்டமிட்டுவருகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.