Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Athrvaa: பராசக்தியில் நடிக்க காரணம்.. நடிகர் அதர்வா என்ன சொன்னார் தெரியுமா?

Atharvaa About Reason For Acting In Parasakthi : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அதர்வா. இவர் அவரின் தந்தை முரளியைப் போலப் படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் டிஎன்ஏ படமானது வெளியாகியுள்ளது, இதைத் தொடர்ந்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட அவர் பராசக்தி படத்தில் நடிக்கக் காரணம் பற்றி பேசியுள்ளார்.

Athrvaa: பராசக்தியில் நடிக்க காரணம்.. நடிகர் அதர்வா என்ன சொன்னார் தெரியுமா?
அதர்வா Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 20 Jun 2025 16:45 PM

நடிகர் அதர்வா (Athrvaa) தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் முன்னணி நடிப்பில் மாறுபட்ட கதைக்களத்துடன் டிஎன்ஏ  (DNA) திரைப்படம் உருவாகியிருக்கிறது. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் (Nelson Venkatesan) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் நடிகர் அதர்வா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக இப்படத்தில் இரு கதாநாயகிகள் நடித்துள்ளனர். அதில் முக்கிய நடிகையாகச் சித்தா படத்தில் நடித்த  நிமிஷா சஜயன் (Nimisha Sajayan) நடித்துள்ளார். இந்த டிஎன்ஏ திரைப்படமானது குற்றம் சார்ந்த திரில்லர் மற்றும் காதல் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் இன்று (2025, ஜூன் 20)  திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மேலும் இப்படத்தின் பிரிமியர் காட்சிகள் கடந்த 2025, ஜூ 18ம் தேதியில் வெளியிடப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நடிகர் அதர்வா சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்தனர். அந்த நேர்காணலில் பேசிய அவர் பராசக்தி படத்தில் நடிப்பதற்கான காரணம் பற்றிப் பேசியிருந்தார். அதில் அவர் பராசக்தி (Parasakthi) படத்தில் எனது கதாபாத்திரமாக அமட்டுமில்லாமல் படமே மிகவும் பிடித்திருந்தது என்று கூறியுள்ளார். அதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

பராசக்தி படத்தில் நடிக்க காரணம் பற்றி அதர்வா பேச்சு :

அந்த நேர்காணலில் பேசிய அதர்வாவிடம் தொகுப்பாளர் பராசக்தி படத்தின் கதையைதேர்ந்தெடுக்கக் காரணம் பற்றிக் கேட்டார். அதற்கு நடிகர் அதர்வா, “முதலில் எனக்குப் பராசக்தி படத்தின் ஸ்கிரிப்ட் கையில் கிடைத்தது, அந்த படத்தைக் கதையை ஸ்கிரிப்டாக கொடுத்துப் படிக்கச் சொன்னார்கள். நான் படித்தபோது எனக்கு அந்த கதை மிகவும் பிடித்திருந்தது. நான் அந்த மொத்த படத்தையும், கதையாகத்தான் பார்த்தேன், நான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறேன் என்று எல்லாம் பார்க்கவில்லை.

நான் ஸ்கிரிப்டாக படிக்கும்போது முழு கதையாகப் படித்தே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் நடித்துவரும் அந்த கதாபாத்திரத்தில் மேலும் எதாவது பண்ணமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது, அதனால்தான் இந்த படத்தில் நடிப்பதற்கு ஒத்துக்கொண்டேன். அதன் பிறகுதான் அந்த படத்தின் நடிகர்கள் மற்றும் இணைக் கலைஞர்கள் என மற்ற எல்லாரும் அதன்பிறகுதான் அமைத்தார்கள். மேலும் இந்த படத்தில் இயக்குநரின் ஸ்கிரிப்ட் எனக்கு மிகவும் பிடித்ததன் காரணமாகவே இதில் நடித்தேன் என்றும் கூறலாம்.

நடிகர் அதர்வாவின் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Dawn Pictures (@dawn.picture)

பராசக்தி திரைப்படம் ;

இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் படம் பராசக்தி. இந்த படத்தில் முன்னணி கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும் அவருக்கு இணையான ரோலில் நடிகர்கள் அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா என பல பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர்.  ஜிவி பிரகாஷின் முன்னணி இசையமைப்பில் இந்த படம் உருவாகிவருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் சுமார் 60 சதவீதம் நிறைவடைந்ததாக கூறப்படும் நிலையில், வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.