Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Athrvaa : முரளியின் ஏஐ காட்சிகள்? அதர்வா என்ன சொன்னார் தெரியுமா?

Atharvaa Speech : கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் அதர்வா. சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான டிஎன்ஏ படத்துக்கு வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பராசக்தி பட ஷூட்டிங் மற்றும் முரளியின் ஏ.ஐ காட்சிகள் பற்றிப் பேசியுள்ளார்.

Athrvaa : முரளியின் ஏஐ காட்சிகள்? அதர்வா என்ன சொன்னார் தெரியுமா?
நடிகர் அதர்வா Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 23 Jun 2025 17:58 PM

நடிகர் அதர்வா (Athrvaa) தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் பிரபல நடிகரான முரளியின் (Murali)  மூத்த மகன் ஆவார். இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் எக்கச்சக்க படங்கள் வெளியாகியிருக்கிறது. இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் டிஎன்ஏ (DNA). இந்த படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் (Nelson Venkatesan)  இயக்கியிருந்தார். இந்த டிஎன்ஏ படத்தில் அர்வா முன்னணி நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாகச் சித்தா படத்தில் நடித்திருந்த நடிகை நிமிஷா சஜயன் இணைந்து நடித்திருந்தார். இவர்கள் இருவரின் ஜோடி இந்த படத்தில் அருமையாக அமைந்திருக்கிறது என்றே கூறலாம். இந்த படமானது கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில், நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறது. இதைத் தொடர்ந்து சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதர்வாவிடம் பராசக்தி (Parasakthi ) படம் குறித்தும், திரைப்படத்தில் முரளியின் ஏ.ஐ (AI) ( Artificial intelligence) பயன்படுத்துவர் பற்றியும் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா கொடுத்த பதில் பற்றிப் பார்க்கலாம்.

பராசக்தி பட ஷூட்டிங் குறித்த அதர்வா பேச்சு :

சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அதர்வாவிடம் பராசக்தி மற்றும் முரளியின் ஏ.ஐ காட்சிகளைப் பாடங்களில் பயன்படுத்துவதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா, “பராசக்தி திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 2 மாதங்களில் நிறைவடைந்துவிடும்” என்று கூறியிருந்தார். மேலும் விஜயகாந்த்தின் ஏ.ஐ. காட்சிகள் படங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதைப்போல முரளியின் ஏஐ. மூலம் படங்களில் கொண்டுவர வாய்ப்பிருக்கிறதா ? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா, “அதற்குப் படத்தின் ஸ்கிரிப்ட் அமைய வேண்டும். இப்போதைக்கு அதுபோன்று எந்த ஐடியாவும் இல்லை. மேலும் எதிர்காலத்தில் வருமா அல்லது வராதா என்பதைப் பற்றி எனக்குத் தெரியவில்லை” என்று நடிகர் அதர்வா அந்த சந்திப்பில் பேசியுள்ளார்.

பராசக்தி திரைப்படம் :

இயக்குநர் சுதா கொங்கராவின் முன்னணி இயக்கத்தில் பராசக்தி. இதில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் நடிகர்கள் அதர்வா, ஸ்ரீலீலா மற்றும் ரவி மோகன் என பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படமானது 1965ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகிவருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு ஜிவி. பிரகாஷ் குமார் இசையமைக்க, டான் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தைப் படக்குழு வரும் 2026ம் ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாம்.